பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிட்ஸ் பர்க் 3.5.85 217 சென்றால் பயன் விளையும் என எண்ணினேன். 16.5.85ல் செல்ல இருந்ததை 14.5-85 என மாற்றி, அங்கங்கே செல்ல வேண்டிய வான்வழிப் பயணங்களையும் திருத்திக்கொண் டேன். எனவே நான் இங்கிருந்து திங்கள் (5.5-85) காலை புறப்படுவதற்குப் பதிலாக, ஞாயிறு (5.5.85) காலையே புறப்படத் திட்டமிட்டு அதற்கெனப் பயணச் சீட்டினையும் பதிவு செய்து கொண்டேன். - இன்று எதிர்பாராத வகையில் குளிர் இருந்தது. 40 (40) வரையில் அளவு குறைந்தது. நான் புனாவிலும் நம் நாட்டில் உதகை, ஏர்க்காடு, பூரீநகர், கோடைக்கானல் முதலிய இடங்களிலும் 5 அல்லது 6 வரை தங்கியிருக்கிறேன். இரவுகளில் அங்கே நன்கு போர்த்தித் தூங்குவதால் மிகக் குளிரும் தெரிவதில்லை. இங்கே பகலில் இந்த குறைந்த நிலையிருந்ததால், மிகக் குளிர்ந்த தன்மையை உணர்ந்தேன். வெளியில் எங்கும் செல்லவில்லை. உடல்நலம் காக்கக் கடமைப்பட்டவனாதலால் - நெடுந்தொலைவில் இங்கிருந்து கொண்டு இன்னும் ஒரு மாதம் செயல்பெற வேண்டியவ னாதலால் - ஒய்வாகவே இருந்தேன். நாளிதழை நன்கு படித்தேன். நாளிதழ்களில் இந்த அமெரிக்க (U. S.) எல்லைப் பகுதி அத்தனை இடங்களிலும் உள்ள பருவநிலை களைப்பற்றி நல்ல விளக்கம், வண்ணப் படங்களுடன் வெளியிட்டிருந்தனர். அத்துடன் நாளை, மறுநாள் (இருநாளைக்கும்) இருக்கப்போகும் நி ைல யி ைன யு ம் தெளிவாகக் குறித்திருந்தனர். தட்பவெப்பநிலை, மழை, தூரல், வெய்யில், கோடை முதலியனவும் இடம்தொறும் குறிக்கப் பெற்றிருந்தன. இந்த நாட்டு இதழ்கள்பற்றி எண்ணும்போது அவை வெளியிடும் பலவகை நிலைகளை எண்ணத் தோன்றுகிறது. ஏறக்குறைய நம் இந்துப் பத்திரிகை அளவில் சுமார் நூறு பக்கங்களுக்குக் குறையாமல் அவை வருகின்றன. நாளிதழ் ஒவ்வொன்றும் தனித்தனித் Gämöllurg, Newsline, Business, Sports, Moneyline, Lifeline எனப் பலவகையில் பிரிந்து, ஒவ்வொன்றும் பத்து