பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 வெளிநாடுகளுக்குப் பயன்பெறு நிலையினைத் தடுத்து, நம் நாட்டிலேயே அவர்தம் அறிவும் ஆற்றலும் பயன்படு: கின்ற வழித்துறைகளை ஆய்ந்து செயல் பெறல் வேண்டாமா?ஆம்!பொது மக்களும் அரசாங்கமும் எல்லா வேறுபாடுகள்ையும் விடுத்து ஒத்துழைத்தால் நாடென்ப நாடா வளத்தன என்ற வள்ளுவர் வாக்கை மெய்யாக் கலாமே. - சமுதாயத்தைப் பற்றிச் சற்றே சிந்திக்க வேண்டும். பலவிடங்களில் இதுபற்றி எழுதியுள்ளேன். மேலை நாடு களில் நம்நாட்டில் உள்ளமை போன்று சமுதாயப் பிணைப்பு இல்லை. தந்தைக்கு மகன் இல்லை - தாய்க்குப் பிள்ளை இல்லை, வயதுவந்ததும் அவர்கள் விரட்டப்படு கின்றனர். முதியோர் அரசாங்க உதவியாலும் பிறவகை யாலும் வாழ்கின்றனர். இது மனித உணர்வுக்கு அப்பாற் பட்ட ஒன்றே எனக் க்ருதுகிறேன். என்றாலும், அந்த வாழ்வில் சுய நலத்தால் நடைபெறும் பல கொடுமைகள் நடைபெறா நிலையினையும் காண்கிறேன். தனக்கு - தன் பிள்ளைக்கு - பேரப்பிள்ளை எனச் சேர்த்து வைக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லையாதலால் குறுக்கு வழியிலெல்லாம் பணக்காரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு இல்லை. ஒன்றும் இல்லாவிட்டாலும் வயதான காலத்தில் அரசாங்கமே இடந் தந்து உணவிட்டு எல்லாச் சலுகைகளும் தருகின்ற காரணத்தால் கவலை யும் படுவதில்லை. எனவே கையூட்டு போன்றவையும் ஏமாற்று வேலைகளும் அவர்களுக்கு அதிகம் தெரிய வழியில்லை. ஆகவே சமுதாய வாழ்வுக்கு ஒருவகையில் அவர்கள் மாறுபட்டவராயினும் ஒரு வழியில் அச் சமுதாயம் தூய்மையாக வாழ வகை செய்கின்றன்ர். எனினும் அத்தகைய பின்ப்பற்ற வாழ்வினை நாம் மேற்கொள்ள வேண்டியதில்லை. அப்படியே நாட்டில் உள்ள எல்லாப் பணிநிலைகளும் அளவிட்டு எல்ல்ை யிட்டு வழங்கப் பெறுவதால் உழைப்பும் உழ்ைப்புக்கேற்ற ஊதியமும் பெற்று மனநிறைவோடு வாழ்கின்றனர். சம்பளம் வழங்குபவர்களும் அதற்கேற்ற செய்வினை முற்றுப் பெறுவதால் சொல்லியதற்கும் அதிகமாகவே வழங்குகின்றனர். ஆதலால் நாட்டில் முதலாளி தொழி