பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிட்ஸ்பர்க் 2.5-85 219 துப்புரவு செய்வது ஆகிய செயல்கள் , அவற்றை அப்புறப் படுத்துவதுவரை நாமே செய்யவேண்டும். இது சிக்கனம் என்பதல்ல. ஆள் கிடைக்காததே. ஒட்டலில் நாமே பலகாரங்கள் காப்பி எடுத்து உண்டால் தரவேண்டியது 2 டாலராக இருந்தால், நாற்காலியில் இருந்துகொண்டு அதே பொருளைக் கொண்டு வரச்செய்து உண்டால் 5 டாலராக உயரும். கார்களுக்கு எரிபொருளும் நாமே போட்டுக்கொண்டால் 2 டாலரானால் அவர்களே போட்டால் 3 அல்லது 4 டாலராகும். அதிலும் பல இடங் களில் ஆளும் கிடையாது. Self Service என்ற பலகையே தொங்கும். என்னைப் போன்ற முழுச் சோம்பேறிகளுக்கு இது கடினமாயினும் இங்கே பிறந்தவரும் வந்து வாழ்பவரும் தத்தம் வீட்டுக்குரிய எல்லாப் பணிகளையும் தாங்களே செய்து கொள்வதில் மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவதைக் கண்டேன். . நான் ஒருநாள் முன்னரே புறப்படுவதால் இன்று பிற்பகல் 2.30க்கு மறுபடியும் வேங்கடவன் கோயில் செல்கின்றேன். இங்கே வேறு முக்கியமாகப் பார்க்க வேண்டிய இடங்கள் இல்லையாதலாலும் சில பெருந் தெருக்களையும் அவற்றில் அமைந்த கட்டடங்களையும் முன்னரே கண்டேனாதலாலும் குளிர் அதிகமாக இருந்த தாலும் நான் அதிகம் வெளியே செல்லவில்லை. இங்கே ஒடும் ஆற்றினுக்கும் பெரும் கால்வாய்களுக்கும் கீழ் அடித் தளம் இல்லாவகையில் மேலே அதன் பளுமாற்றும் வகையில் (நம் கல்கத்தா ஹவுரா பாலம் போல) கட்டியுள்ளமை கண்டு மகிழத்தக்கது. அண்மையில் கட்டிய சில பாலங்கள் புதுமுறையிலும் அமைகின்றன. பல தொழிற்சாலைகள் இரும்புத் தொழிற்சாலைகள் - போர்க்கருவிச் சாலைகள் இருந்தும் அவற்றைக் காண இசைவு பெறுவது கடினம் என்றனர். இந்நகரம் அளவில் சிறியதாயினும் பலப்பல முக்கிய தொழிற்சாலைகளின் நிலைக்களனாக அமைகின்றது