பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் பெரியாழ்வார் பல்லாண்டினையும் பாடி முடித்தனர். நம் நாட்டில்கூடக் கேட்டறியாத - கண்டறியாத காட்சியும் ப்ாட்டும் என்னை உருக்கின. தமிழ்நாட்டில் இறைவனைத் தமிழில் பாடித் துதிக்கும் பட்டர் உளரா? தமிழ் காக்கும் அரசாங்கம் வற்புறுத்துகிறதா? இங்கே வெள்ளையர் ஆட்சியில் நம்மாழ்வார் நடமிடுகிறார்; ஆண்டாள் சன்னதி அழகுற உள்ளது: பெரியாழ்வார் வாய் திறந்து பாடுகிறார். இது வியப்பல்லவா! அத்துடன் ஒரு வெள்ளையர் குடும்பம் பூசைக்கு முன் வந்து முடியுமட்டும் இருந்து, வணங்கி, அருச்சனை செய்து, பிரசாதமும் பெற்றுச் சென்றனர். நாளை அவர்கள் செலவில் கோயிலில் ஒமம் உண்டாம். அவர்களைப் பஜனை முடிந்தபின் கண்டு பேசினேன். பதினைந்து ஆண்டுகளாக அவர்கள் (அந்த அம்மையார் புடவை அணிந்திருந்தார்) இந்துக்களாக உள்ளனர் என்றும் அவ்வாறு இன்னும் பலர் இந்த நாட்டில் உள்ளனர் என்றும் அறிந்தேன்; மகிழ்ந்தேன். சுமார் 50 பேருக்கு மேல் அந்த மலை உச்சியில் குளிரையும் பொருட்படுத்தாது குழந்தை களுடன் குடும்பம் குடும்பமாக வந்து வழிபட்ட காட்சி சிறந்தது. அனைவருக்கும். எல்லாவகையான நிவேதனங் களும் (ஆறுவகை) வழங்கப்பெற்றன. பத்துமணிக்கு வீடு வந்து, கழிந்த ஒரு திங்களையும் வேங்கடவனையும் நினைந்து எதிர்காலத்தும் அவனருள் இயைவது உணர்ந்து உறங் கினேன். - -