பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிட்ஸ்பர்க் 4.5.85 இன்று காலையில் முறைப்படி எல்லாக் கடன்களையும் முடித்துக்கொண்டேன். இன்று சித்திரை நிறைமதி நாளல்லவா! தமிழ் நா .ெ ட ங் கு ம் விழாக்கோலம் பூண்டிருக்கும். மதுரைச் சொக்கர் மணவழகராகக் காட்சி தருவரன்றோ! கழுக்குன்றம் போன்ற இடங்களில் பெரு விழா அல்லவா! இங்கும் இன்று பெருவிழா திருக்கோயிலில் நடைபெறவுள்ளது. நான் மாலை சென்று வழிபட வுள்ளேன். இடையில் கூடுமாயின் வேறு சில இடங்களைக் காண நினைக்கிறேன். இன்றும் கதிரொளி நன்கு வீசுகிறது. இன்று நியூயார்க்கிலிருந்து நியூயார்க் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. மணி அவர்கள் அவர்தம் நண்பர் ஒருவருடன் இங்கே வர இருக்கின்றார். எனவே திரு. வள்ளியப்பன் அவர்கள் விமான நிலையத்துக்குக் காரொடு சென்றார். நான் காலைக்கடன்களை முடித்து நாளிதழ்களைப் படித்து. சற்றே ஒய்வு கொண்டிருந்தேன். அவர்கள் 10மணி அளவில் வந்து சேர்ந்தனர். பல்வேறு பொருள்களைப்பற்றி - இன்றைய இந்திய அமெரிக்க வாழ்க்கை முறை, தமிழகத் தெய்வநெறி, வரலாறு போன்றவைகளைப்பற்றி அனைவரும் அமர்ந்து நெடிது பேசிக் கொண்டிருந்தோம். பகலில் சிறிது ஓய்வுக்குப் பிறகு, இன்று சித்திரா பெளர்ணமிய்ாதலால், சத்தியநாராயண பூசை கோயிலில் உண்டாம். அதில் வள்ளியப்பன் மாதந்தொறும் குடும்பத்துடன் பங்கு கொள் வாராம். எனவே இன்று மாலை கோயில் செல்ல முடிவு செய்தோம். சத்தியநாராயண பூசை தமிழ் நாட்டில்