பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் வழக்கத்தில் இல்லாதது. வடநாட்டில் பலரும் மேற் கொள்ளுவது. இங்கே வடநாட்டவரும் கன்னட நாட்ட வரும் அதிகமாக வருவதால் நிறைமதிதோறும் இக் கோயிலில் அந்த வழிபாடு நடைபெறுகிறதாம். நாங்கள் கோயிலுக்கு ஏழு மணி அளவில் சென்று சேர்ந்தோம். வழியில் உள்ள பல தொழிற்சாலைகளைப் பற்றிப் பழநியப்பன் அவர்கள் விளக்கிக் கொண்டே வந்தனர். கண்ணாடித்தொழிற்சாலை, இரும்புத்தொழிற்சாலை இவை இயங்கும் நிலைபற்றியும் பிற முறைகள் பற்றியும் கூறிக் கொண்டே வந்தனர். கோயிலுக்கு 25 ஏக்கர் நிலம் ஒதுக்கப் பெற்றதெனவும் மேலும் பல விரிவாக்கத் திட்டங் கள் உள்ளன எனவும் அறிந்தேன். இத் திருக்கோயில் கட்டிய பணியில் இவருக்கே பெரும் பங்கு உண்டு என்பதைக் கோயிலில் அறிந்தேன். கோயில் வெளியில் நின்று இயற்கைக் காட்சிகளைத் துய்த்து, பிறகு உள் சென்றேன். சரியாக ஏழுமனிக்குப் பூசை தொடங்கியது. அதில் பங்கு கொள்வோர் 35 டாலர் கட்டவேண்டுமாம். எத்தனை பேர் வேண்டுமானாலும் கட்டிப் பங்கு கொள்ளலாமாம். இன்று பதினைந்து பேரளவில் பங்கு கொண்டிருப்பர். பெரும்பாலும் குடும்பம் குடும்பமாக இருந்தனர். இளங் குழந்தை தொட்டிலுடனும் ஒரு குடும்பம் இருந்தது. அனைவரும் அன்புடன் பக்தி கலந்த நிலையில் பூசையில் பங்கு கொண்டனர். சிறு விக்கிரகத்துக்கு அபிடேகம். பின் அதற்கும் பெரிய படத்துக்கும் ஆராதனை. அனைத்தும் முடிய 8.30 ஆயிற்று. இங்கே, தாம் தம் வீட்டில் செய்து வந்த இனிப்புப் பலகாரங்களை இறைவனுக்குப் படைத்து அனைவருக்கும் வழங்குகின்றனர். மேலும் தூப தீப" ஆராதனை அனைவரும் தத்தம் கைகளாலேயே (கணவன் மனைவியர் இணைந்து பிடித்துக் கொண்டு) செய்கின்றனர். ஆடவர் கால் உறையுடன் காணப்படினும் பெண்கள் நம் நாட்டுமுறைப்படி புடவை கட்டியே வழிபாடாற்றுகின்றனர். (காஞ்சீபுரம் புடைவையும் இரண்டொன்று காணப்பட்டது).