பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிட்ஸ்பர்க் 4-5.85 225 இறைவனுக்குத் திங்கள் தொறும் பல விலை உயர்ந்த புடவைகள் காணிக்கையாக வரும் எனவும் அவற்றில் தேவைபோக மற்றவற்றை இரண்டாண்டுக்கு ஒரு முறை 'ஏலத்தில் விற்பார்களென்றும் நல்ல விலைக்குப் போகும் என்றும் சொன்னார்கள். பூசைமுடியும் தருவாயில் நான் ஒதுங்கி நின்றேன். பக்கத்தில் ஒரு அன்பர் (K.S. வெங்கடராமன் Ph.D.) இங்கே பொறியாளராகப் பணியாற்றுகின்றவர். (Engineer, Alumia Chemicals & Ceramic Division, Acco Laboratories Pensilvania. 15069) நீங்கள் சென்னை அண்ணாநகர் வள்ளி யம்மாள் பள்ளியைச் சேர்ந்தவர்தானே என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. "ஆம்" என்றேன். 1977-78ல் நான் அண்ணாநகரில் குடியிருந்தபோது, பல முறை அந்தப் பள்ளி வழியே (என் வீடு பக்கத்தில் இருந்ததால்) சென்றிருக் கிறேன். நீங்கள் அங்கேயே இருந்து கட்டடங்கள் கட்டுவதை மேற்பார்வையிட்டதைக் கண்டுள்ளேன். பாவம்! இப்படி உழைக்கிறாரே என்று நினைத்ததுண்டு. ஆயினும் அப்போது எனக்கு ஒன்றும் உதவ முடியவில்லை. இன்று இங்கே பொறியாளராகப் பணியாற்றுகின்றேன். என் காணிக்கையாகப் பள்ளிக்கு நான் தரும் நன்கொடையைப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் பெரும் கட்டடத்தில் இது ஒரு செங்கல்லாக இருக்கட்டும் என்று 201 டாலருக்கு (சுமார் 2500 ரூபாய்) ஒரு செக் எழுதி இறைவன் முன்னே தந்தார். நான் என்னை மறந்தேன். சென்னையிலே என்னிடம் நேரில் பேசி அறியாத அன்பர் - இங்கே அமெரிக்காவில் - பிட்ஸ் பர்கில் - வேங்கடவன் முன் நின்று இப்படித் தாமே வலிய வந்து உதவுகிறாரே என எண்ணி அவரை வணங்கிப் போற்றினேன். அவர்தம் பெயரில் நிரந்தரமாக வங்கியில் இட்டு வரும் வட்டியினை ஏழை மாணவனுக்குச் சம்பள மாகப் பயன்படுத்தச் சொன்னார். இன்னும் ஆண்டுதொறும் இயலுவதை அனுப்புவதாகவும் கூறினார். அவர் அண்ணார் அங்கே இருப்பதாகவும் கூறினார். நான் அனைத்தையும் ஏ.-15