பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் செய்து, ஊர் சென்றதும் அண்ணாவையும் கண்டு, பிறகு இவருக்கும் கடிதம் எழுதுவதாகச் சொன்னேன். உடனிருந்த அவர்தம் துணைவியாரும் இப்பணியில் ஆர்வம் காட்டினார். எங்கோ, எதற்கோ வந்த விடத்தில், இறைவன் திருமுன்பு, இந்த வகையில் வள்ளியம்மாள் கல்வி அறத்துக்கு வளம் சேரும் நிலையினை எண்ணி நெடிது நின்றேன். அன்பர் குடும்பத்துடன் விடைபெற்றுச்சென்றார். (திரு. வள்ளிப்பன் அவர்களுக்கும் அறிமுகப்படுத்தினேன்.) பிறகு என்னைப் பிரியாது உடனுறையும் இறைவன் அருட்பெருக்கையும் என்னைப் பணியில் ஆட்கொண்டருளும் பொருட்கருணை யையும் எண்ணி, அருட் பெரும் செல்வனாகிய வேங்கடவன், பத்மாவதி (அலர்மேல்மங்கை) ஆகியோரிடம் பிரியா விடை பெற்றுக்கொண்டு நான் திரும்பினேன்; நாளை பாஸ்டன்’ செல்கிறேன். இறை உணர்வோடு இரவு 11மணி அளவில் உறங்கச் சென்றேன்.