பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாஸ்டன் 5.5-85 இன்று விடியற்காலை எழுந்து காலைக்கடன்களை முடித்துக்கொண்டு 6.30க்குப் பயணத்துக்குத் தயாரானேன். திரு. பழநியப்பன் அவர்களும் காலையிலே எழுந்து, எனக்கெனக் காலைச் சிற்றுண்டி (இட்லி) காப்பி முதலியன தயார் செய்யச்சொல்லி, தந்து உதவினர். அவர்தம் துணைவி யாரும் உடனிருந்து உதவி வழியனுப்பி வைத்தனர். 6.50க்குப் புறப்பட்டோம். கிட்டத்தட்ட 40கல் தொலைவு விமான நிலையம் செல்லவேண்டும். திரு. வள்ளியப்பன் அவர்கள் வண்டி எடுத்துக்கொண்டு உடன் வந்தார்கள். (இந்த ஊரில் எதற்கும் ஆள் இல்லாமை போன்றே கார் ஒட்டுநரும் கிடைக்க மாட்டார்கள்) இவர்கள் வீட்டில் மூன்று கார்கள் இருப்பினும் (ஒவ்வொருவர் வீட்டிலும் குறைந்தது 2 அகோர் இருக்கும் கார் இல்லையானால் இந்த ஊரில் ஒன்றும் செய்ய இயலாது) ஒன்றுக்கும் ஒட்டுநர் இல்லை. எனவே அவர் களே வந்து விமான நிலையத்தில் உடனிருந்து "டிக்கெட்" எடுத்து உள்ளே செல்லும் வரையில் உதவிப் புறப்பட்டனர். அவருக்கு இன்று வேறு பணிகள் இருப்பினும் எனக்கு உதவு வ தையே தலையாகக் கொண்டார்கள். விமானம் சரியாக 8.30க்குப் புறப்பட்டது. 10 மணிக்குச் சரியாகப் பாஸ்டன் விமானநிலையத்தில் இறங்கியது. விமானத்திலிருந்து வெளியே வந்ததும் அருளுடை பவுத்ராஜி அவர்தம் தமையனார் திரு. கோபால் சர்மா அவர்கள் தம் மைந்தருடன் (அஸ்வின்) காத்திருந்து என்னைக் கண்டு