பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

லாளி வேறுபாடும் வேலை நிறுத்தங்களும் கதவடைப்புகளும் அருகி உள்ளன.

உலக நாடுகள் அத்தனையும் நான் கண்டுவிட்டேன் என்றோ அல்லது நான் சென்ற நாடுகளில் எல்லாப் பகுதிகளையும் முற்றக்கண்டு விட்டேன் என்றோ சொல்ல இயலாது. எனினும் நான் கண்டவரையில் எல்லா நாடுகளும் எல்லா வகையிலும் சிறந்திருக்க நாம் மட்டும் ஏன் இப்படித் தாழ்ந்த நிலையில் இருக்க வேண்டும் என எண்ணுகிறேன். வீடு, நாடு இரண்டும் நம்மதே என்ற உணர்வு இல்லாத ஒன்றே இதற்குக் காரணமாகும். இதற்கு அரசாங்கத்தை மட்டும் குறை கூறிப் பயனில்லை. மக்களும் காரணமாகின்றனர். திட்டமான கடுமையான செயல்களை அரசாங்க அதிகாரிகள் மேற்கொண்டால் ஓரளவு நாடு திருந்தும்.

அரசாங்கம் தக்கவர்களைப் பல நாடுகளுக்கு அனுப்பி, எவ்வெத்துறையில் எவ்வெவ்வகையில் முன்னேற்றம் காணலாம் என ஆய்ந்து, அவற்றைச் செயலில் கொண்டு வர வேண்டும். தமிழ்நாட்டு அரசாங்கம் உலகெங்கணும் தமிழ், தமிழ்க்கலை, தமிழ்ப் பண்பாடு, தமிழ் நாகரிகம் தமிழ்ச் சமயம், தமிழர் தொன்மை போன்றவற்றை ஆய்ந்து தெளிந்து, அவற்றைத் தொகுத்து உலகுக்கு காட்ட முற்பட வேண்டும். வாய்ப்பு நிறைய உண்டு 'கூட்டத்தில் கூடி நின்று கூடிப் பிதற்றலின்றி நாட்டத்தில் கொள்ளாரடி' என்று அன்றைய தமிழனைப் பார்த்துப் பாடிய பாரதி வாக்கை, தமிழன்-தமிழ், அரசாங்கம் பொய்யாக்கி, இன்று 'சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்தீங்கு சேர்ப்பிர்' என்ற அவர் வாய்மொழிப்படி செயலாற்றி வையம் உள்ளளவும் கன்னித் தமிழும் அதன் பண்பும் பழமையும் நாகரிகமும் நன்னலமும்வாழ உடனே வழி காண வேண்டும் என வேண்டிக் கொள்ளுகிறேன்.

இந்நூல் முழுவதிலும் இத்தகைய கருத்துக்களை வாரித் தெளித்துள்ளேன். இங்கே ஒரளவு அவற்றைச் சுருக்கிக் காட்டினேன். நான் முன்னரே காட்டியபடி