பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் பந்தயப் போட்டியினைக் கண்டோம். 20கல் தொலைவு ஒடும் (Marattan Race) பெரும் போட்டி இதுவாகும். சாலை ஓரங்களிலேயே இவர்கள் ஒடுகின்றனர். சாலை ஓரங்களில் பல பொதுமக்கள் சிறியரும் பெரியரும் . நின்றுகொண்டு, ஒடுபவர்களை ஊக்கிக்கொண்டும், அவர்களுக்குப் பருகுநீர் அளித்துக்கொண்டும் நின்றதைக் கண்டேன். இந்த நாட்டிலே இத்தகைய விளையாட்டுப் போட்டிகளுக்கும் பிற பந்து விளையாடல்களுக்கும் பெரும் சிறப்பு அளிக்கின்ற னர். உலகெங்கணும் இந்த நிலை உண்டு எனினும், இங்கே அது மிகச் சிறப்பாகப் போற்றப் பெறுகின்றது. வீட்டில் உள்ள செல்வன் அஸ்வின் அத்தகைய ஆர்வம் கொண்ட இளைஞர். வகுப்பில் முதலிடம் பெறுவது போன்று, விளையாட்டிலும் பங்குபெற்று முதலிடம் பெறுவர் என அறிந்தேன். இன்று நடைபெற்ற, ஏதோ கூடைப்பந்து போட்டியில் (Basket Ball) தனக்கு உற்றவர் வெற்றி பெறவில்லை என வருந்தினான். பொதுவாக இங்கே - இந்த ஊரில் மனநிலை போற்றலும் அறிவு வளர்த்தலும் உடலோம்ப்லும் இணைந்த வகையில் கல்வி யும் பிறவும் அமைந்திருப்பன கண்டு மகிழ்ந்தேன். இந்த ஊர் மிகத் தொன்மை வாய்ந்ததாம் (இந்த நாட்டிலேயே). ஆங்கிலேயர் இந்த நாட்டுக்கு வந்தபோது இங்கேதான் முதன் முதல் இறங்கினார்களாம். இந் நாட்டுப் பழங்குடிகளுக்கும் அவர்களுக்கும் இங்கேதான் மாறுபாட்டுச் சண்டைகளும் பிறவும் நிகழ்ந்தனவாம். வாஷிங்டன் தலைநகராவதற்குமுன் இதுவே ஆங்கிலேயர் தம் தலைநகராக அமைந்ததாம். நம் நாட்டில் அதே ஆங்கிலேயர் தில்லிக்கு முன் கல்கத்தாவைத் தலைநகராகக் கொண்டார்களல்லவா! இங்கே உரிமை பெற்றபின் ஐரிஷ்காரர்கள் அதிகமாக இருக்கிறார்களாம். உள்நாட்டு மக்களும் அதிகமாக இல்லையாயினும் விரவி உள்ளனர் என அறிந்தேன். நியூயார்க், வாஷிங்டன் போன்று, அதிகமாக இங்கே அவர்