பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் நாடே நிலைகுலையும். எனவே எவ்விதத் தடங்கலும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுகின்றனர். அங்கே தவறு நடந்தால் யாரைக் கேட்பது? அரசாங்கமே அனைத்தையும் நடத்துவதால், தவறுக்கு அரசாங்கமே பதில் சொல்ல வேண்டும். ஆனால்? இவ்வாறு பலப்பல சிந்தனைகளுக்கிடையே அக நகரா கிய கடைத்தெரு முதலியன உள்ள இடத்தினைத் தவிர்த்து, பிற இடங்களையெல்லாம் ஒரளவு சுற்றிக்கொண்டு, மாலை 8 மணி அளவில் வீடு திரும்பினோம். இங்கே முன்னரே குறித்தபடி, ஒரு மணி நேரம் தள்ளி வைத்தமையின் 8 மணிக்கு நன்கு இருட்டவில்லை; எனவே மாலை எனக் குறித்தேன். வீட்டிற்கு வந்து அனைவருடனும் கலந்து பேசிக் கொண்டிருந்தோம். திரு. சர்மா அவர் க ள் சொற்களினால் - இருபொருள் கா ட் டி - அனைவரையும் சிரிக்க வைப்பதில் வல்லவர் என அறிந்தேன். ஒன்று காட்டினால் போதும். சென்னையில் ஆந்திர கேசரி என ஒருவர் இணைந்த சென்னை மாநிலத்தில் அமைச்சராகவும் இருந்தார். ஆந்திராகேசரி’ என்பதைச் சர்மா ஆந்திராகே. சரி' எனப் பிரித்து, அவரைத் தமிழகம் ஆந்திராவிற்கே அனுப்பி விட்டது என்றார். இவ்வாறு பலவகையில் சொல்லாடல்களால் அனைவரையும் சிரிக்கவைத்தார். நாள்தொறும் இக் குடும்பம் அவர்தம் சொல்லாட்சியாலும் நல்ல செயல்களாலும் சிரித்தே வாழ்கின்றோம் எனப் பெருமைப்பட்டுக்கொண்டது கண்டு மகிழ்ந்தேன். பின் பொதுவாக நாட்டில் உள்ள சமய நெறி, சமுதாய வாழ்வு இன்ன பிறவற்றைப் பேசிக்கொண்டே இருந்தோம். அஸ்வனிடம் (9 வகுப்பு) அவர்தம் பாடமுறைகள் பற்றியும் தே ர் வு முதலியனபற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். பருவத் தேர்வு முதலியனபற்றி விளக்கினார். இவைபற்றி யெல்லாம் முன்னரே குறித்துள்ளேன். இரவு உணவுக்குப் பின் சற்றே பேசி இருந்து 10மணி அளவில் உறங்கச் சென்றேன்,