பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் தற்குச் சாலை எண்களையும், வலது, இடது என்று குறித்து வைத்திருந்த குறிப்பின்படியும், உரிய இடத்தினை எளிதில் சேர முடிந்தது. இந்த நாட்டில் எங்கும் சாலைப் போக்குவரத்து செம்மையாக அமைந்துள்ளது. ஒவ்வொரு சாலைக்கும் எண் உண்டு. நல்ல பெரிய எழுத்தில் சாலை எண்கள், இடம், வலம் போன்ற குறிப்புகளை சாலை நடுவிலே உயர ஆங்காங்கே தொங்கவிட்டிருக்கிறார்கள். புதிதாக வருபவருக்கும்கூட, இந்தக் குறிப்புகள் மிக எளிதாக வழிகாட்டி உதவுகின்றன. சாலைகளும் நன்கு செப்பம் செய்யப்பெற்றவை. 45 கல்லுக்கு குறைவாகவோ 75க்கு அதிகமாகவோ ஒட்டினால் தண்டனை உண்டு’ இங்கே மெதுவாகச் செல்லும் வேறு போக்குவரத்து எதுவும் இன்மையால், நான் முன்னரே சுட்டியபடி எங்கும் கார்'கள் விரைந்து பறந்து கொண்டிருக்கின்றன. நாங்கள் குறித்த இடத்துக்குப் பத்து மணி அளவில் சென்று சேர்ந்தோம். அவர்தம் சீடராகிய அவ் வீட்டுத் தலைவியார் அன்புடன் வரவேற்றனர். அவர்கள் கோவை திருப்பூரைச் சேர்ந்தவர்கள் என்றும் சென்னை அண்ணா பல்கலைக் கழகத் துணை வேந்தர் திரு. டாக்டர் குழந்தைசாமி அவர் தம் நெருங்கிய உறவினர் என்றும் கூறினர். அவர்தம் தந்தையார் ஊரிலே உள்ளனர் என்றும் அவ்வூர்க் கல்லூரியின் ஆட்சிக்குழுவில் பொறுப்பேற்றுத் தொடங்கினர் என்றும் கூறினர். பல ஆண்டுகளுக்குமுன் சென்னைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்க அக் கல்லூரி விண்ணப்பித்தபோது, நான் அந்த இணைப்புக் குழுவில் உறுப்பினனாகச் சென்றது நினைவுக்கு வந்தது. அப்போது அவர்தம் தந்தையாரையும் கண்டுள்ளேன். அந்த நினைவுகளுக்கு இடையே, அவர்தம் காரிலேயே மற்றவர்களுடன் வெளியே புறப்பட்டோம். சிறு தூறலாக இருப்பினும் காண வேண்டியவற்றைக் காண வேண்டுமல்லவா! அவர்கள் (Concoard) கண்கார்டு என்னுமிடத்துக்கு அழைத்துச் சென்றனர். இங்கேதான் 1775ல் அமெரிக்கப்