பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாஸ்டன் 6-5-85 237 படைவீரர் முதல் முதல் உரிமை வேட்கையால் (19.4.75) போரிடத் தொடங்கினராம். ஒரு சிற்றாறு ஓடுகிறது. அதன் இருபுறத்திலும் இருவர்தம் படைகளும் இருந்து போரிட்டன வாம். அங்கே மடிந்தவர்களைப் பற்றிய குறிப்புகளும் இரங் கல் உரைகளும் கற்களில் செதுக்கி வைக்கப்பெற்றுள்ளன. ஆற்றினைக் கடக்கும் சிறு மரப்பாலம் ஒன்றும் இன்னும் உள்ளது. அதன் இருபுறமும் அவர்கள் நின்று போர் செய் தனர். இந்தப் புது இங்கிலாந்துக்கும் பழைய இங்கிலாந்துக் கும் இடையில் நடைபெற்ற போரினைப் பற்றி - முதல் போரினைப்பற்றி - பலப்பல குறிப்புகள் இங்கே வைக்கப் பெற்றுள்ளன. அந்த இடங்களையெல்லாம் படம் பிடித்து நன்கு காட்டியுள்ளனர். அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கி, ஆடை, பிற பொருள்கள் அனைத்தும் காட்சிப் பொருளாக வைக்கப் பெற்றுள்ளன. இந்த நாட்டுக் கிராம மக்கள்கூட தம் அரசினைத் தாமே அமைத்துக் கொள்ளும் ஆர்வத்தில் அன்று ஆங்கிலேயரை எதிர்த்தனர்; வெற்றியும் கண்டனர், இன்றும் அனைத்தையும் பிணைக்கும் நடுவன் அரச வாஷிங் டனில் இயங்கியபோதிலும், ஒவ்வொரு நகரும், கிராமமும் தனித்தனியாக, தத்தம் வரிப்பணங்களைக் கொண்டு, தமக்கு வேண்டிய கல்வி, காவல், பிற தேவைகளை நிறை வேற்றிக் கொள்ளுகின்றனர். தேவையறிந்து அவர்கள் அவ் வப்போது ஒன்று கூடி, தேவையாயின் வரியினையும் உயர்த்தி கொண்டு, சமூக நலனையே கருத்தில்கொண்டு செயலாற்று கின்றனர். எனவே அன்றும் கிராம மக்கள் அந்நியரால் ஆளப்படுவதை அறவே வெறுத்தனர். அமெரிக்க நாட்டில் அங்கிருந்து வந்து குடியேறியவர்களும் தனிச் சமுதாயமாக அமைந்துவிட்ட காரணத்தால் தனியாட்சி விரும்பியதில் வியப்பில்லை அல்லவா! இங்கிலாந்திலுள்ள ஆங்கில நாட்டு அரசு, இவர்களுடன் அன்று நடந்த பெரும் போரின் காரண மாக (Seven Years War) கிராமங்களின் தனி உரிமைகளைத் தடுத்து, தாமே வரி விதித்து ஆதிக்கம் செலுத்த நினைத் தமையே உரிமைப்போருக்கு அடிப்படையாக அமைந்தது எனலாம். 1770ல் கிளர்ச்சி அறிந்து அத்தகைய வரியினை