பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 யாரையும் தாழ்த்துவதற்கோ அன்றித் தாக்குவதற்கோ இவை சுட்டப் பெறவில்லை. பரந்த பாரதம் - சிறப்பாகத் தமிழகம் உலகநாடுகளோடு போட்டியிட்டு எல்லா வகையிலும் உயர்ந்து சிறக்கவேண்டும் என்ற உள்ளத்து உணர்வாலேயே இந்நூலை எழுதி விரைவிலும் வெளிக்கொணர்ந்தேன். கடந்த சில ஆண்டுகளாக நான் தமிழாசிரியர் உலகை விட்டே-நூல்கள் எழுதுவதைவிட்டே வேறு பணியின் பொருட்டு விலகி நின்றபோது, பல அன்பர்களும் மாண வர்களும் தொடர்ந்து நூல்கள் எழுத வேண்டும்ென்றும் கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்தி வந்துள்ளனர். அவர்கள் விருப்பம் இந்நூல் வெளியீட்டால் ஒரளவுநிறைவுறுகின்றது. அதற்குமேலாக இங்கே காட்டப் பெற்ற வழி பொது மக்களும் அரசாங்க மும் இணைந்து செய்யலாற்றி உயர வேண்டும் என்பதே என் வேண்டுகோளும் குறிக்கோளும் ஆகும். நான் சென்ற இடங்களிலெல்லாம் அன்பர்கள் புகைப்படங்கள் எடுத்தனர். அவை அனைத்தும் இந்நூல் வெளியிடுவதன் முன் வந்து சேரவில்லை. வந்த ஒருசில வற்றை மட்டும் நூலில் இணைத்துள்ளேன். புகைப்படங் கள் உதவிய அவர்களுக்கு என் நன்றி உடைத்து. மேலட் டையில் சென்ற நாடுகளில் முக்கியமாக உள்ள இடங்கள், கட்டடங்கள், இயற்கைச் சூழல்கள் ஆகியவை இடம் பெறுகின்றன. நான் வெளிநாடுகள் செல்வதற்காக எல்லா வகையான உதவிகளையும் செய்து ஆற்றுப் படுத்தியும், பல பல்கலைக்கழகங்களுக்கு எழுதி என்னை அறிமுகம் செய்து வைத்தும் பயணத்துக்கு வேண்டிய வேறுபல உதவிகளைச் செய்தும், பயணம் முடித்து வந்தபின் கண்ட வற்றையும் கருத்தினையும் ஆட்சிக்குழுவில் சொல்ல வைத்தும், பிற நாட்டுத் தமிழர் தேவை அறிந்து, உடனே தக்கன செய்ய ஏற்பாடுகள் செய்தும் இந்நூலுக்கு அறி முகஉரை தந்தும் எல்லா வகையிலும் உதவிய தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் திரு. டாக்டர்.