பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாஸ்டன் 6.5-85 239 கடுங்குளிரிலும் பெய்யும் மழையிலும் எனக்கு உதவ நினைத்த அன்பர்கள் என் பொருட்டு வெளியில் வந்து, இவ் வாறு உதவுவதை எண்ணி அவர்களை வாயாரப் போற்றி னேன். (எனக்கும் அவர்களுடைய மேல் அங்கி ஒன்றை மழைக்கும், குளிருக்கும் பாதுகாவலாகத் தந்தனர்) இவ் வாறு பல பொருள்களைக் கண்டு அவர்கள் வீட்டிற்கு ஒரு மணிக்கு மேல் திரும்பினோம். அந்த அம்மையார்-திருமதி விசாலாட்சி ஆறுமுகம் அவர்கள் அவர்தம் குரு அருட் செல்வியார் முதல் முதல் அவர்கள் மனைக்கு எழுந்தருளுவ தால் காலையிலேயே (பகல் வெளியே செல்வதால்) நல்ல உணவினைத் தயாரித்து வைத்திருந்தார்கள். அவர்தம் கணவர் பொறியாளர் பணிமேற் சென்றிருந்தார்; இரு பிள்ளைகளும் பள்ளிக்குச் சென்றிருந்தனர். இவரும் தம் பிள்ளைகள் பயிலும் பள்ளியில் தாமே சென்று ஊதியமின்றி ஆசிரியப் பணியாற்றுவதாகச் சொன்னார்கள். அங்கே நம் பள்ளியிலும் ஒருசில நல்ல பெற்றோர்கள் இவ்வாறு முன்வந்து உதவும் நெறியினை எண்ணினேன். திருமதி விசாலாட்சி . அன்னபூரணி - அளித்த சித்ரானங்களை உண்டு, இரண்டு மணி அளவில் விடைபெற்றுக் கொண்டு வீடு திரும்பினோம். சிறிது நேர ஓய்வுக்குப்பின் மாலை மற்றொரு பக்கம் செல்ல ஏற்பாடாகியிருந்தது.அதற்கிடையில் அன்னையாரும் திரு. சர்மா அவர்களும் நான் 8-5-85ல் நியாகரா செல்லப் பயணப் பதிவு செய்தும், அங்கே தங்குவதற்காக ஏற்பாடுகளை உறுதிப்படுத்தியும் வந்து உதவினர். மாலை 6 மணி அளவில் பெங்களுர் நண்பர் ஒருவருடைய வீட்டிற்குப் புறப்பட்டோம். அவர் பெயரும் கோபால்’ என்பதே. இரு குடும்பங்களும் இளமை முதலே இணைந்து வாழ்ந்தனவாம். அவர்கள் இங்கே உடல் நலமில்லாதிருந்து தெளிவு பெற்று அடுத்த வாரம் ஊருக்குச் செல்வதால் கண்டு வரப்புறப் பட்டனர். நானும் உடன் சென்றேன். அவர்கள் அனை வரும் - குடும்பத்தினர் - எங்களை ஏற்றுப் புரந்தனர். போகும் வழியிலும் வரும்போதும் திரு. சர்மா அவர் களும் அவர்தம் மகன் அஸ்வின் அவர்களும் வேடிக்கையாகச்