பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாஸ்டன் 7.5-85 இன்று காலை சற்றே காலம் தாழ்ந்தே கண் விழித்தேன். இரண்டு நாட்களின் சுற்றும் மழைக்கிடை உழன்றதும் மிகுகுளிரும் சற்றே அயர்ச்சியைத் தந்தன. எனினும் காலையில் எழுந்து கடன்களை முடித்துக்கொண்டு குறிப்பினையும் எழுதி முடித்தேன். சிற்றுண்டிக்குப் பிறகு வெளியே அஞ்சலகம் சென்றேன். ஊருக்கும் பிறவிடங் களுக்கும் அஞ்சல் அனுப்பி,பக்கத்திலுள்ள பயணமுகவரிடம் சென்று, "பப்பலோ" விலிருந்து கிளைவ்லேண்டு 10.5, 85 பிற்பகல் செல்ல விமானப் பயணப் பதிவு செய்து கொண்டேன். பிறகு வீட்டிற்கு வந்து ஒய்வு பெற்றேன். பெரியவரோடு பல நல்ல பொருள்களைப் பற்றி - தெய்வ நெறி வாழ்வினைப் பற்றிப் பேசிக் கொண்டே இருந்தேன். பகல் 1 மணி அளவில் உணவு கொண்டேன். பிறகு 3 மணி வரையில் ஒய்வு. நான் நாளை செல்வது பற்றிப் பல விடங் களுக்குத் தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு, எனக்கு உதவ அருட்திரு. பவுத்ராஜி அவர்கள் முயன்றார் கள். என்றாலும் தக்க உதவி கிடைக்கவில்லை. மாலையில் ஒரிரு இடங்களுக்குச் சென்று எப்படியும் தக்க வசதி செய்வ தாகக் கூறினார்கள். இன்று பெரும்பாலும் ஒய்வாகவே இருந்தேன். நான் கொண்டு வந்த சில கட்டுரைகளைப் படித்துக் காட்டினேன். சிலவற்றை வேண்டுமென வைத்துக் கொண்டனர். பின் படி எடுத்து அனுப்புவர். பல பாடல்களைப் பாடினேன். சில வேளைகளில் நல்ல தமிழ் - கர்னாடக இசைத் தட்டுகளைப் ஏ.-16