பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் பெற்றதெனவும், புது அரசியல் சாசனம் பிளடெல்பியாவில் 1786ல் கையொப்பமிடப் பெற்றதெனவும் முன்னரே குறித்துள்ளேன். இந்த நாட்டில் முதலில் ஒரே இணைப்பில் 48 மாநிலங்கள் இருந்தன. பின் 1898ல் அலாஸ்கா மாநிலம் வந்ததாம். (49). கடைசியாக ஹாவாய்த் தீவுகள் 1959ல் 50வது மாநிலமாக அமைக்கப் பெற்றதாம். மக்கள் தனி வாழ்வு போற்றக் கூடிய நிலையில் இன்றேனும், சமுதாய அமைப்பும் சமுதாய நலம் காக்கும் ஊராட்சி முறையும் அதைப் பேணும் அரசியல் சாசனமும் ஆட்சி முறையும் நன்கு அமைந்துள்ளமையே இந்த நாடு எல்லாத் துறைகளிலும் முன்னணியில் இருப்பதற்குக் காரணம் என்ற நிலையிலே என்னை மறந்து இரவு 10மணிக்கு உறங்கச் சென்றேன்.