பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கியாகாரா 8-5-1985 காலை விடியலில் எழுந்து கடன்களை முடித்துக் கொண்டு 6.30க்கு விமான நிலையத்துக்குப் புறப்பட்டேன். அன்னையார் அதற்குள் பொங்கல், காப்பி செய்து தந்து வழி அனுப்பினார்கள். அனைவரும் விடைதர, திரு. கோபால் அவர்கள் காரிலேயே கொண்டு வந்து, விமான நிலையம் செல்லும் ஊர்தியில் ஏற்றி அனுப்பினார். விமான நிலையத்தே வந்து, பயணத்தைப் பதிவு செய்துகொண்டு, சிகாகோ செல்வதற்கும் பயண ஏற்பாடுகளை முடித்துக் கொண்டேன். 9 மணிக்குப் புறப்பட வேண்டிய விமானம் 9-45க்குத்தான் புறப்பட்டது. இதுவரையில் எந்த இடத்தி லும் இவ்வாறு காலம் தாழ்த்துப் புறப்பட்டதில்லை. இங்கே பெரும்பாலும் குறித்த நேரத்தில் அனைத்தும் நடை பெறு கின்றன. 8.50க்கு விமானத்தில் உட்கார்ந்தோம். எனினும் 9-45க்கு புறப்பட்டது. மற்றும் இன்னும் தாமதாமாக 11. 15 க்குத்தான் (பறக்கும் நேரம் 1 மணி 10 நிமிடம்) சென்று. சேர்ந்தது. இது எனக்கு வியப்பைத் தந்தது; மற்றவர் களுக்கும்தான். எனவே நான் நியாகாரா செல்லவேண்டிய உந்துவண்டி 11-15க்கு புறப்பட்டதை விட்டேன். பின் ஒரு மணி நேரம் காத்திருந்து 12-15க்குப் புறப்பட்டு பகல் 1 மணிக்கு எனக்கென முன்னரே ஏற்பாடு செய்த விடுதிக்கு வந்து சேர்ந்தேன் (ஊர்தியே அங்கு நின்றது.) விடுதியில் செயல்புரியும் செல்வியாரும் மற்றவரும் அன்புடன் ஏற்று நல்ல அறை ஒன்றினைத் தந்து பிற வசதிகளையும் செய்து தந்தனர். எதிரில் உள்ள சிறு