பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் உணவுச் சாலையில் ரொட்டி வெண்ணெய் காப்பி உண்டேன். அமெரிக்க மண்ணில் கால் வைத்த பிறகு இங்கேதான் எனக்குத் தெரிந்தவர்கள் இல்லை என்ற உணர் வில் நின்றேன். முன் இலண்டனிலேயும் இங்கே நியூயார்க், பிலடெல்பியா, பாட்லிமோர், வாஷிங்டன், பிட்ஸ்பர்க் பாஸ்டன் ஆகிய இடங்களிலும் நம் சொந்த வீடு என்னுமாறு இருந்த நான், இங்கேதான் புதிய சுழலின் இடையில் இருப் பதை உணர்ந்தேன். எனினும் விடுதியினர் அந்த நினைவு மாற்றும் வகையில் வேண்டியவற்றைச் செய்து தந்தனர். வெளியே அதிகக் குளிர். நாற்சத்தைந்து எல்லை என்பது நான் இதுவரை காணாதது. (இருநாட்களுக்கு முன் பாஸ்டனில் 50 இருந்தது) எனினும் அறையினை வெம்மைப் படுத்தித் தந்தனர். சிறிது நேரம் ஒய்வு கொண் டால் 3 மணி அளவில் சுற்றிக் காணச் செல்லலாம் என்றனர். நானும் ஒய்வு கொண்டேன். குளிர் அதிகமாக இருந்தபோதிலும், சூரியன் நன்கு ஒளி விசினான். இந்த நிலை இல்லையானால் இங்கே வரவும் தங்கவும் காணவும் இயலாது. எனவே கதிரவனுக்கு வணக்கம் செலுத்தினேன். இன்று இங்கே கூட்டம் அதிக மாக இல்லை. ஆதனால் அமைதியாக அனைத்தையும் காண முடிந்தது. சரியாக மூன்று மணிக்கு புறப்படுவோர் வந்தார். யாரும் இல்லை:நான் ஒருவனே பெருங்காரில் புறப்பட்டேன். டிரைவருக்கு வயது 80. அவர் 13 வயதில் தந்தையுடன் இத்தாலியிலிருந்தது.இங்கே வந்தவராம். அவர் ஒரே மகன் இந்நாட்டில் தென்கோடி மாநிலத்தில் (Florida) பேராசிரிய ராகப் பணிபுரிகிறாராம். இவர் தம் துணைவியாருடன் தனியாக இங்கே உழைத்து உண்கிறாராம். வயதானவர் களுக்கு ஊர்தோறும் அமைந்த இலவச விடுதி, இங்கேயும் உண்டு. எனினும் அதில் செல்ல விரும்பாமல் இந்த வயதி லும் உழைத்து உண்ணவே விரும்புகிறார். முதலில் மீன்காட்சிச் சாலைக்குச் சென்றோம். அங்கே நான் இது வரையில் காணாத வகையில் பலப்பல மீன்