பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248. ஏடு நாடுகளில் எழுபது நாட்கள் இவ்வாறு பலவகை - இன்றும் பல வகைகள் உள்ளன. உட்காரும் மீன்களும் நிற்கும் மீன்களும் ஒளிகாலும் மீன் களும், பலநிறக் கடல் நண்டுகளும் உயிருடன் நீர்க் கூண்டு களில் வைக்கப் பெற்றுள்ளன. அவற்றின் படங்களும் தனி யாக உள்ளன. அவற்றின் பிரிவுகளை என்னால் விளக்க முடியாது-விளக்கவும் இயலாது. இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு அகன்ற நீர் தேங்கும் ஒரு சுற்றுமாடம் வந்தோம். அங்கே நான்கு மணிக்கு ஒருதரம் சில மீன்களுடன் வேடிக்கை (சர்க்கஸ்) காட்டுகிறார்கள். நாளைக்கு நான்கு முறைபோலும். நல்ல வேளை நான் சென்ற அதே வைளையில் (4 மணி) அந்த முறை வந்தது. டிரைவர் அதைக் கட்டாயம் காணவேண்டும் என்று என்னை அந்தவிடம் அழைத்துச் சென்றார். வேறு சிலரும் இருந்தனர். சர்க்கஸ் மானேஜர் என்பவரை போன்ற ஒருவர் ஒரு பெருமீனை (தரையிலும் நிற்கும் Sea lion)நடத்தி வந்தார். அது குதிக்கிறது; நிற்கிறது, இசைபாடு கிறது, தாளம் போடுகிறது, மேளம் அடிக்கிறது, பந்தைத் தலையில் - மூக்கு நுணியில் வைத்து விழாவகையில் குதித்து விளையாடுகிறது; வளையத்துள் புகுகின்றது; கம்பைத் தாண்டுகிறது. சற்று நேரத்தில் அதனோடு அதன் இன மான பெண்மீனை விடுகிறார். இரண்டும் கட்டிப்பிடிக் கின்றன. முத்தமிடுகின்றன: கொஞ்சிக் குலாவுகின்றன. மேளம் அடிக்கின்றன. ஒன்றைக் காலால் (பின் இருகால் களே உண்டு) நிற்கின்றன. இவ்வாறு அவைகள் அமைய, அகன்ற, நீர்த்தொட்டியில் உள்ள மூன்று பெரிய மீன்கள் (சுமார் 8") பல விளையாடல்களைச் செய்கின்றன. கிளி யைப் போன்று, வெளியில் நின்று கிரிச்சிடுகின்றன். இடும் உணவுகளை எட்டிப் பிடிக்கின்றன. 20 அடி 15 அடி உயரம் எழும்பி, அவர் பிடிக்கும் வளையத்துள் புகுந்து செல்லு கின்றன. கம்பைத் தாண்டுகின்றன. பீரிட்டு வரும் 20 உயரத்தில் உள்ள நீர்ப் ப்ெருக்கைத் தாண்டுகின்றன. புரள்