பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் பிரியுமுன் உள்ள அந்த ஆற்றங்கரை ஒரமே சென்று பார்த்தேன். மிக அகன்று, கொள்ளிடம் பிரியுமுன் உள்ள நம அகன்ற காவிரி போன்ற உள்ளது. பின் பிரிந்து, வீழ்ந்து ஒன்றி, மிக ஆழத்தில் செல்லும்போதும் அதன் கரையை 9-1},Gus Foru(). Guðjanajuth (Newyork state power generating unit) வரைசென்றேன், சுமார், 305 உயரத்திற்கு நீரைச் செலுத்தி மின்சாரம் எடுக்கின்றனர். அங்கே ஆறு குறுகலாக, 80 அல்லது 100'க்கு மேற் போகாமல் உள்ளது. அங்குள்ள மின் நிலையத்தினைக் கண்டேன். மறுபுறம் கனடா நாட்டினர் உள்ளனரே! அவர்கள் இதில் பங்கு கேட்கவில்லையா? என வினவினேன். அவர்களிடம் மின்விசை அதிசமாக உள்ளது. தேவை இல்லை: இந்நாட்டு மக்கள் தேவைக்குக் கொள்ளட்டும் என்று விட்டுவிட்டனர் என்றார் டிரைவர். நான் நம் நாட்டில் ஒக்கனகல் மின் நிலையம் அமைக்கத் தமிழ்நாடு அரசாங்கம் மேற் கொண்ட முயற்சியினையும் அதற்கு அதே தாயகத்தைச் சேர்ந்த மற்றொரு மாநிலம் முட்டுக் கட்டையாக நின்று முடியாமற் போனதையும் சிந்தித்தேன். இங்கே வேற்று நாடே விட்டுக் கொடுக்கிறது. அங்கே ஒரே நாட்டின் ஒருபகுதி வளர்ச்சியை மற்றொரு பகுதி தடுக்கிறது. ஆம்! கண் நன்றாக வாழக் கை தடுக்கிறது. எந்த நாடு வளரும்? எண்ணிப் பாருங்கள்! உலகிலேயே மிகச் சிறந்த நீர் வீழ்ச்சி என் யாவராலும் போற்றப் பெறும் இதன் அருகில் நின்ற நில்ை எண்ணி மகிழ்ந்தேன். வழியில் "Devil's Hole என்ற பகுதியினைக் கண்டு அது பற்றிக் கேட்டேன். அந்த ஆற்றங்கரையின் ஒரு பகுதியில். முழையில் - ஆங்கிலேயர் தங்கிப் போர் புரிந்தனராம். அவர்களை அப்போது விரட்டியடித்து, அதற்கு அப்பெயரிட் டனராம். அடுத்து மின் நிலையம், நயாகாரா பல்கலைக் கழகம், 100 ஆண்டுகளாகிய பாலங்கள் முதலியன கண்டேன். ஒரிடம் வெள்ளாடுத் தீவு (Goatisland) எனவே