பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கியாகார 8-5-85 25:1. இருந்தது. அதன் பெயர்க் காரணம் அறிய முடியவில்லை. நம் ஆறுதாண்டும் காவிரி போல் அமைந்தாகலாம் என முடிவு Q&ti,G#,Gir. Three Sister island, Luna ialand Gumgirp ua) தீவுகளையும் அகன்ற பூஞ்சோலையை (Park)யும் பார்த்துக் கொண்டே மாலை 6.30 மணிக்கு வீடுதிக்கு வந்தேன். பின் சிறிது காப்பி அருந்தி ஒய்வுபெற்றேன். இரவு 9மணிக்குச் சென்றால், மின்னியல் வீழ்ச்சியைக் காண முடியும் என்றனர். எனினும் பொங்கி மேலெழும் துளிகள் மறைக்கினும் மறைக்கலாம் என்று, விடுதி முகப்பில் இருந்த ஒளி வண்ணப் படத்தின்னக் காட்டினர். இரவில் அங்கே செல்வது எப்படி என்ற உள்ளத்தாலும் சோர்வின் காரணத்தாலும் அங்கே செல்லவில்லை. (படத்தில் மிக நன்றாக அந்த வண்ணங்கள் தெரிந்தன.) பின் பால்டன் திரு. சர்மா அவர்களுக்கு, அவர்கள் ஏற்பாடு செய்தபடியே யாயும் நலமே உள்ளன என்று தொலைபேசியில் சொன்னேன். பின் எழுத வேண்டிய சில கடிதங்கள் எழுதி முடித்தேன். புறப்பட்டு சரியாக 35 நாட்களில் கண்ட வற்றை யெல்லாம் கருதினேன். அடுத்த 35 நாட்களில் (மொத்தம் 70 நாட்கள்) காணப் போகின்றவற்றை யெல்லாம் கனவு கண்டேன். பல எண்ணங்களுக்கிடையில் இரவு 10 மணி அளவில் உறங்கச் சென்றேன். .