பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(நயாகாரா) . கிளைவ்லேண்டு 9-5-85 இன்று காலை சற்று தாமதமாகவே எழுந்தேன். அதிகமாக வெளியே செல்ல வேண்டியதில்லை, ஒய்வாக மெல்லக் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு குறிப்பனைத்தையும் எழுதி. முடித்தேன். பின் பக்கத்தில் உள்ள ஒருவிடுதியில் சிறு பிஸ்கட், பால் அருந்தினேன். மறு படி நீர் வீழ்ச்சியினைக் காண விரும்பினேன். நான் தங்கிய இடத்திலிருந்து 15 நிமிட நடை தூரத்தில்தான் அது இருந் தமையின் நடப்பது எளிதாக அமைந்தது. அங்கே அதிகக் கூட்டமில்லை. ஒரே இடத்திலிருந்து இரு வீழ்ச்சிகளையும் காண முடிந்தது. அலைகொழித்து, புகை எழுப்பி, திளைத்து விழும் அலை இரண்டும் பின் இணைந்துசென்று,மின்னளித்து, பின் பரவும் நிலை அனைத்தையும் உயர் நிலையிலிருந்து கண்டேன். மிக உயரமான ஆய்வு நிலையத்தின் மேலே ஏறி நாற்புறமும் நோக்கினேன். நெடுந்தொலைவு தெரிந்தது. கனடா நாட்டின் உள்பகுதியும் பல தொழிற் கூடங்களும் தங்குமிடங்களும் தெரிந்தன. பேராறு ஒன்றியும் பின் பிரிந்தும் பிறகு காட்டிடை செல்லும் காட்சியும் அழகிது. கதிரவன் ஒளி அந்த நீர்த்திவலைகளின் இடைப்பட்டுத் தண்ணீரில் விழ, வானவில் - வையவில்லாக நீரில் மிதக்கும் வில்லாக - எழுநிறமும் காட்டி கண்ணுக்கு இனிய விருந்தாக அமைந்தது. சில சமயங்களில் வானத்தில் இருவில் தோற்றம் காண்பது போன்றே பரந்தாடும் தண்ணிரிலும் இருவானவில் கள் - வையத்துவில்லாகக் காட்சி தந்தன. எதிரிலே உள்ள் சிறுசிறு தீவுகளிலும் மக்கள் குழுமியிருந்தனர், எனினும்