பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(கியாகரா)-கிளைவ்லேண்டு 9-5-85 253 ஆற்றில் படகுவிடும் காலம் இன்னும் தொடங்கவில்லையாம். அதில் அமர்ந்து வீழ்ச்சிவரையிலும் செல்லும் காட்சி இனிமை யாகவும் - அதே வேளையில் அச்சமாகவும் இருக்குமாம். நான் அத்தகைய அனுபவத்தை காவிரியின் ஒக்கனகல் வீழ்ச்சியில் பெற்றிருக்கிறேன். (காண்க . மலைவாழ் மக்கள் மாண்பு) அங்கேயே சிறிது நேரம் இருந்து இறங்கி, பக்கத்தி லுள்ள கடைகளில் நுழைந்தேன். இந்நாட்டின் பிறபகுதி களைக் காட்டிலும் இங்கே உணவுப் பொருள்களும் பிற உணவுக்கு வேண்டியவையும் உடை, பிற சாமான்கள், வீட்டிற்கு வேண்டிய உட்கார வேண்டியவை அனைத்தும் விலை குறையாகவே உள்ளன. ஒரு வேளை நாட்டின் கடைசியாக உள்ளமையும், கனடாவில் உள்ள விலைகளை ஒட்டியும் இவை அமையலாம் என எண்ணினேன். எனினும் கோடையில் (ஜூலை, ஆகஸ்டு) தேவை கருதி உணவுப் பொருள்களின் விலைகள் கூடும் என்றனர். பின் நான் தங்கிய விடுதிக்கு வந்தேன். (Coachman Model) மோடல் என்பது தங்க எல்லா வசதிகளும் விடுதி களைப் போன்று உடையது. ஆனால் உண்பதற்கு ஒன்றும் கிடைக்காது. வாடகையும் சற்றே குறைவாக இருக்கும். போலும். என் விடுதிக்கு எதிலேயே உணவுக்கூடம் இருந்த தால் தொல்லை இல்லை. நான் நேற்று இவ்வூரைச் சார்ந்த cupravir so spy Qu-ā1560srujuh (Village of lewiston and Artpark Village of youngstown,0ld fort,Niyagava).jpgpáðulpmay இடங்களையும் கண்டு விட்டேனாதலால் மறுபடியும் சுற்றச் செல்லவில்லை. நுரை கொழித் து விரைந்தோடும் பெரு வெள்ளம் குளிர்காலத்தில் அப்படியே உறைந்து கல்லாகிக் காட்சிதரும் நிலையை இப்போது என்னால் க்ாண முடிய வில்லை. மேலும் இந்த இடத்தை விட்டும் பிரியவும் மன மில்லை, எனினும் முறைப்படியும் விதிப்படியும் நான் இந்த நாட்டை விட்டுச் செல்ல வேண்டியதை எண்ணினேன். எனக்காகச் சொல்லி வைத்த ஊர்தியும் 2 மணிக்கு வந்தது. இருபத்து நான்கு மணி நேரம் இங்கே கழிந்ததை எண்ணி