பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் விடுதி அலுவலர்களிடம் (அவர்கள் அன்புடன் ஓம்பியதால்) விடைபெற்றுப் புறப்பட்டேன். வழியில் இந்த நயாகாரா போராறு எத்தனை விதங் களில் வளைந்தும் பிரிந்தும் இணைந்தும் வருகின்றது என்பதைக் கண்டேன். பரந்த அமெரிக்க எல்லையில்-இரு பெரு நாடுகளின் எல்லையாக நின்று வற்றாவளம் பெருக்கும் இப்பேராறு வாழ்க’ என வாழ்த்தினேன், உந்து வண்டி யினை ஒட்டிய செல்வியார் அது நாட்டிற்குப் பலவகையில் பயன்படுவதைக் கூறிக்கொண்டே வந்தார். யாருமில்லை; என் செய்வது' என்று எண்ணிக் கொண்டே இவ்வூருக்கு வந்த என்னை எனை ஆண்ட இறைவனுடன் என்னையும் வரவேற்று, இந்த ஊரின் இயற்கைச் செல்வம், அணைத்து. இன்யூட்டி, இன்முகம்காட்டி, வாழ்த்தி வழியனுப்பிய உயர் நிலையை எண்ணிக் கொண்டே பப்பலோ விமான நிலையத்திற்கு 3மணிக்கு வந்து சேர்ந்தேன். பப்பலோ’ என்று ஏன் பெயர் வந்தது என யாராலும் சொல்ல முடியவில்லை, நம் நாட்டிலும் ஒரு பப்பலோ" நாடு உண்டல்லாவா! ஆம் ‘எருமை நாட்டைத் தான் சொல்லுகிறேன். மைசூர் பகுதியை எருமை நாடு என முற்கால இலக்கியங்கள் எல்லாம் புகழ்கின்றன. நம் நாட்டுச் சேலத்'தைப் போன்று இங்கே ஒரு ஊர் உண்டு; அப்படியே இந்த ஊரும் அமைகின்றது. வேங்கடவன் திருப்பதியும் (பிட்ஸ்பர்க்கில்) அமைந்து விட்டதல்லவா! விமான நிலையத்துக்குச் சற்று முன்பாகவே வந்து விட்டமையால் இவைபற்றி யெல்லாம் எண்ணிக் கொண்டே கண் மூடி மெளனியாகி உட்கார்ந்திருந்தேன். மாலை 6-50க்குத் தான் கிளைவ்லேண்டு விமானம். எனவே நான் அதுவரையில் காத்திருந்தேன். (ஊரில் காணவேண்டியுள்ள முக்கிய இடங்கள் ஒன்றுமில்லையாதலாலும் புது இடம், சென்றால் திரும்பி வரமுடியாத நிலையிலும் எங்கும் செல்லவில்லை) கிளைவ்லேண்டில் மாலை 8 மணி அளவில் இறங்க வேண்டிய விமானம் காலம் தாழ்ந்து 8 மணிக்குத்தான்