பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் நாள் 3.4.85 - சென்னை விமான நிலையத்தில் அன்பர்கள் அனை வரும் நல்வாழ்த்துடன் வழியனுப்பப் பம்பாய் செல்லும் விமானத்தின் அடிவைத் தேறினேன். எனக்குப் பக்கத்தில் ஒரு நல்ல நண்பர் இருந்தார். விமானம் நேராகப் பம்பாய் செல்லாது பெங்களுர் சென்றது. 35 நிமிடத்தில் தரை தட்டவே நான் வியந்தேன். எனினும் விமான அலுவலர் முன்னமே அதுபற்றி அறிவித்திருந்தமையால், பிறர் சிந்திக்க வில்லை. தான் என்னை மறந்த நிலையில் அதைக் கேட்க வில்லை போலும். பெங்களுரில் விமானம் நிறுத்தப்பட்ட தால், இடமிருந்ததால், சுமார் நூறுபயணிகள் இதில் ஏற்றப் பெற்றனர் போலும். பெங்களுர் நிலையத்தில் முக்கால் மணி நேரம் நின்றபின், விமானம் பம்பாய் நோக்கிப் புறப் பட்டது. விமானிகள்.மாற்றத்துக்கும் காலதாமதத்துக்கும் மன்னிக்கும்படி வேண்டினர். விமானம் ஒருமணி நேரம் தாமதித்து இரவு 9.10க்குப் பம்பாய் உள் நாட்டு விமான நிலையத்தில் இறங்கிற்று. இறங்கி வெளிவந்ததும் அன்பர் சள் வே. நாகராஜனும் அவர் மருமகனும், திரு. கந்தசாமி அவர்களும் காத்திருந்தனர்; அவர்களுடன் வாடகை வண்டி ஏறி, வேனா மருகர் இல்லத்துக்கு - பன்னாட்டு விமான் நிலையத்துக்கு அருகில் உள்ள வீட்டிற்கு - சென்றேன். வேனா அவர்தம் மனைவியாரும் மகளும் அன்புடன் வரவேற்று நான் முன்னமே எழுதிக் கேட்டுக்கொண்டபடி நல்ல இட்டலி'யினை, சிறிது இனிப்போடு வழங்கினர். வேனா'வின் பேரக் குழந்தைகள் (ஒரு பைய்ன், ஒரு பெண்) gy.--2