பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் பெற்றிருந்தன. இங்கே இருவரும் அறிவியல் - மருத்துவத் துறை பயின்ற பணியாற்றுவதாலும், மகன் மின் அணுத் துறை (Electronic) பொறியியல் பயில்வதாலும் அத்துறை கள் சார்பான நூல்கள் பல இருந்தன. நான் நம் பள்ளிக்குத் தெவையான கணிப்பொறி பற்றிய குறிப்புகளோ நூல் களோ கிடைக்குமா என பலவற்றைப் புரட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தேன். நேரம் செல்வதே தெரியவில்லை. மாலையில் மற்றொரு தொலைக்காட்சிப் படம் பார்த்தேன். அதில் வெள்ளையர் குடும்பம் ஒன்று கறுப்பர் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனைத் தமக்கு உரியவ னாக்கிக் கொள்ளுகின்றது; சுவிகாரம் எடுத்துக்கொள்ளு கின்றனர். தாயை இழந்த அந்தப் பையனை அவன் தந்தையார் எவ்வளவு பற்றோடும், பாசத்தோடும் போற்றி னர் என்பதும், அதே வேளையில் வெள்ளையர் தம்பதிகள் இருவரும் அவனிடம் எவ்வாறு அன்பினைப் பொழிந்தார்கள் என்பதும் நன்கு விளக்கிக் காட்டப்பெறுகின்றன. நான்கு அல்லது ஐந்து வயது நிரம்பாத அந்தக் குழந்தை அழகாக, முகபாவத்தோடு, மணிமணியாக ஆங்கிலத்தில் பேசுவதும் மற்றவரிடம் பழகுவதும் பார்த்தும் கேட்டும் மகிழ்தற் குரியன. (படத்தில் சிறியவனாயினும் சற்றே வயது அதிக மாணவனாகத்தான் இருப்பான்). தந்தைப் பாசம் பெற்ற குழந்தையைவிட மனமில்லா நிலையில் நெகிழ்ந்து நின்றதை யும் கடைசியில் இளங்குழந்தை எதிர்கால வாழ்வையும் அதன் உளநிலையினையும் அறிந்து வெள்ளையரிடம் விட இசைந்த தன்மையையும் அக் குழந்தையை அணைத்துத் தம்மை மறந்து நின்ற வெள்ளையர் தம்பதியின் நிலையினை யும் நன்கு படம் பிடித்துக் காட்டியுள்ளனர். தொலைக் காட்சிகளில் பலப்பல பயனற்ற விளம்பரங்களையும் வேடிக்கைகளையும் இதுவரையில் கண்ட எனக்கு இன்று இந்த இருவகைக் காட்சிகளும் சிறந்ததாகப்பட்டன. தொலைக்காட்சிகள் நல்லதும் செய்யக்கூடும் என்ற உண்மையினையும் உணர்ந்தேன். இவற்றுள் முன்னது