பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் யால் தாம் பல புதிய உண்மைகளை உணர்ந்ததாகக் @[JLj gigρ£)uq6ii srmri. (You did a fine job and I also learn many new things. Your report was well orgainzed). இந்து சமய உண்மைகளையெல்லாம் அறியச் சில நூல் நிலையங்களுக்குச் சென்று, சில அறிஞர் எழுதிய புத்தகங் களையெல்லாம் படித்து, குறிப்பெடுத்து, தெளிவாக - ஆனால் சுருக்கமாகத் தந்துள்ளமையும், இந்த நாட்டில் பிறந்து, எத்தனையோ பொருள்கள் இருக்க, இதை ஆய்வுக்குத் தேர்ந்தெடுத்தமையும் அக் குழந்தையின் உள்ளத்தையும் உழைப்பையும் உணர்த்தின. இந்து சமயக் கடவுளர் - பிரம்மா - விஷ்ணு - ருத்திரன் (சிவன்) பற்றியும் அவர்தம் முத்தொழில் பற்றியும் வேதம், ஆகமம், உபநிடதம், கீதை, இராமாயணம், பாரதம் முதலியன பற்றியும், நான்கு யுகங்கள் பற்றியும் அந்த யுகங்களால் ஆகிய பல்வேறு கல்பங்கள் பற்றியும் விளக்கி, மும்மூர்த்தியர் தம் துணைவியர் அவர்தம் தொழில்கள் பற்றியும்கூறி, நடராசர் உருவம் பற்றியும் பிற உருவங்கள் பற்றியும் விளக்கி, கர்மயோகம், பக்தியோகம், ஞானயோகம் பற்றியும் ஆச்சிரமங்கள் பற்றியும் எடுத்துக் காட்டி மோட்ச நகரங்களையும் அவற்றில் உயிர் பெறுநிலையிை யும் காட்டி, கோயில்களிலும் வீடுகளிலும் வழிபடும் முை களையும் இன்னும் பலவற்றை விளக்கிக் காட்டியுள்ளை சிறந்தது. இந்த நாட்டில் இத்தகைய உணர்வுடன் எல்லா குழந்தைகளும் இருந்தால், விரைவில் இந்த நாடே இந் சமய நாடாகி விடுமே என நினைத்தேன். தற்போ ஒரளவு நம் சமயக் கொள்கைகள் இங்கே பரவி ஏற்று கொள்ளப் பெறுகின்றன. இத்தகைய பள்ளி (மாண்டிசோரி)யினை நாளை இங் விடுமுறையாதலால், சிகாகோவிலாயினும் காண முடி செய்தேன். குழந்தைகளின் வளர்ச்சியினைப் பற்றி பள்ளி மேற்கொள்ளும் பலவகை நிலைகளைப் பற்றி காட்டினர். சிலவற்றை உடன்கொண்டு செல்வேன்.