பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளைவ் லேண்டு 11.8-85 263 பயில்வது 7 வயது இருக்கும்) நாள்தோறும் காலையில் பதிவு நாடாவை எடுத்து வைத்து அது பாட, அதன்படி தானே பயிற்சி செய்வதைக் கண்டேன். அப்படியே திருமதி. சதானந்தம் அவர்கள் தம் வீட்டிற்கே இளம் பெண்களை வரவழைத்து நாட்டியம் கற்றுக் கொடுக்கின்றனர். வேறு சில வீடுகளிலும் வந்து கண்ட பல அன்பர்தம் வீடுகளிலும் நடனம் பயிலும் பெண்கள் உள்ளளர். பிர்ட்ஸ்பர்க் வேங்கடவன் கோயிலில் வாரந்தோறும் நடனம், இசை வகுப்புகள் நடைபெறுவ தறிந்தேன். • நடனங்கள் பெரும்பாலும் நம்நாட்டுப் பண்டைய மரபினை ஒட்டியே கற்பிக்கப் பெறுகின்றன. என்னும் அபிநயத்துக்குரிய பாடல்களின் பொருள்களையும் விளக்கங் களையும் பிறவற்றையும் ஆங்கிலத்திலேயே சொல்லிக் கொடுக்கின்றனர். தமிழரல்லாத கன்னட தெலுங்குநாட்டுக் குழந்தைகளும் பயில்கின்றனர். மேலும் நம் தமிழ் நாட்டுக் குழந்தைகள் பலருக்குத் தமிழே தெரியாதே! ஆங்கிலத்தில் மிகச் சரளமாகப் பேசும் குழந்தைகள் தமிழில் தடுமாறிப் பேசுகின்றனர்; எழுத்தே தெரியாது. விட்டில் தாய், தந்தை இருவரும் பணிமேற் செல்வதாலும் உதவிக்கு யாரும் இல்லையாதலாலும் அலுவலகப்பணி, வீ ட் டு ப் பணி இவற்றைக் கவனிக்கவே நேரம் போதவில்லை, பாவம் இயந்திரங்களாகவே இயங்குகின்றனர். இரவில் ஒரு வேளை தான் நல்ல சமையலும் உணவும். இந்த நிலையில் அவர் களுக்கு, தம் பிள்ளைகளுக்குத் தமிழ் கற்றுக் கொடுக்க நேரம் எங்கே? சில பிள்ளைகள் கற்கவும் விரும்புவதில்லை இந்நாட்டுப் பழக்க வழக்கங்களில் மூழ்க நினைக்கின்றனர். எனவேதான் பல பெற்றோர்கள், முன்னரே நான் குறித்த படி, குழந்தைகள் பொருட்டுத் தாயகம் திரும்பத் திட்டமிடு கின்றனர். ஆயினும் எத்தனைபேர் திட்டத்தை நிறை வேற்றுவார்களோ? நடனத்தில் அபிநய்ம் பிடிக்கும் பாடல்களுக்குச் சரியாகப் பொருள் தெரியாததால், பிள்ளைகள் கற்கச் சிறிது