பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் கடினமாகின்றது. இன்று நான் சென்றவிடத்தில், கற்பக வல்லி நின் பொற்பதகங்கள் பணிந்தேன்' என்ற பாடலும் "வாணரங்கள் கனி கொடுத்து' என்ற குற்றாலக் குறவஞ்சி யும் வேறுசில பாடல்களும் நடனத்துக்கு ஏற்ற பாடல்களாகக் கொள்ளப்பெற்றன. எல்லாப் பாடல்களையும் ஜதி, சுரம் முதலியவற்றையும், ஆரம்பப் பாடங்களையும் நாடாக்களில் பதிவு செய்து நன்கு பயன்படுத்துகின்றனர். பயில்கின்றவர் கள் தத்தமக்குரிய நாடாக்களைத் தாமே எடுத்துச் செல்லு கின்றனர். அதை இயக்கும் பெட்டியினை ஆசிரியர் கொண்டு வருகிறார். இன்றைய வகுப்பு ஒரு ஆரம்பப் பள்ளியில் (4-ம் வகுப்பு வரை) நடை பெற்றது. பள்ளி, பரந்த நிலப்பரப்பில் (சுமார் 4 ஏக்கர் இருக்கும்) ஒரே அடுக்கில் அழகுறக் கட்டப் பெற்றுள்ளது. இங்கேயும் அரச:ங்கம், வீடுகள் மரங்களால் இருப்பினும், பள்ளிகள் திண்ணிய சிமிட்டி, சுண்ணாம்பு, இரும்பு கலந்த நல்ல உரமுள்ள வகையில் இருப்புக் கர்டர்கள் இட்டுச் செம்மையாகக் கட்டவேண்டும் என உத்தர விட்டுள்ளது. எனவேதான் மக்கள் வாழிடங்கள் எப்படி இருப்பினும் (அவையும் ஒழுங்காக வரிசையாக முறைப் படியே கட்டப்பெற்றுள்ளன; நம் நாடுபோலக் கண்டபடி கட்ட இயலாது) பொது இடங்கள் அனைத்தும் வலுவுடன் நூறாண்டுகள் நிலைக்கும் வகையில் இரும்பு, சிமிட்டி, கருங்கல்ஜல்லி கலவையாகிய காங்கிரிட் கொண்டே கட்டப் பெற்றுள்ளன: பெறுகின்றன. நயாகராவில் ஒரு பாலம் கட்டும் பணியினையும் புதிய சாலையிடும் பணியினையும் கண்டு, அவர்தம் வேலைப்பாடுகளையும் அவற்றிற்குப் பயன்படும் க ரு வி க ைள யு ம் கண்டு வியந்தேன். இங்கே இத்தகைய பொதுப் பணிகளுக்கு ஒதுக்கப் பெறும் தொகை அனைத்தும் அதற்காகவே செலவிடப் பெறும். ஏதோ ஒரு அளவில் செலவிட்டு மிகுதியை எங்கேயோ போக்கும் நாகரிகம் இங்கே இல்லை. எனவே பொது இடங்கள் நன்கு திண்மையாகவும் செம்மை மாகவும் உள்ளன.