பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிள்ைவ் லேண்டு.11.8.85 265 இன்றைய வகுப்பு நடந்த ஆரம்பப்பள்ளியில், ஆசிரியர் வகுப்பு நடத்த ஒரு நாலைக்கு 5 டாலர் வாடகை தருகிறார் களாம். வேறு இடமாயின் ஒரு மணிக்கு 20 டாலர் வாடகை யாம் (இங்கே எல்லாம் - தெருவில் கார் நிறுத்துவது முதல் எல்லாம் - மணிக்கணக்கே சம்பளமும் அப்படித்தான்). பெரும்பாலும் பள்ளிகளை இத்தகைய, கலை, கலாசாரச் சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு மிகக் குறைந்த வாடைக்கு. விட்டு உதவுகிறர்களர்ம் ஆயினும் வாடகை தருவதாகச் சொல்லி முடிந்த பின் ஏமாற்றும் தனவந்தர் இங்கே கிடையாது. (அங்கே நம் பள்ளியில் ஒரு நிகழ்ச்சிக்குப் பள்ளியின் நாற்காலிகள், இடங்கள், மின்சாரம் அனைத்தை யும் பயன்படுத்தி, இவ்வளவு தருகிறேன் என்றும் சொல்லி, அறிந்தவராதலின் முன்பணம் கேட்க வேண்டாம் என விட்டமையின், நிகழ்ச்சி முடிந்தபின் அத்தனை வேலை களையும் செய்த பணியாளர்களுக்கும் பள்ளிக்கும் ஒன்றும் தராத திரும்பிப்பார்க்காத பெரிய மருத்துவர் என் கண்முன் நின்றார்.) இந்த நடன வகுப்பை நடத்திய பெண் இளையவர். மருத்துவம் பயின்று அதில் உயர்பட்டம் பெற்று மருத்துவ மனையில் பணியாற்றுகின்றார். இனிய நச்சினார்கினியர்' என்ற பெயரை உடையவர். காரில் போகும் போதே s திருமதி விஜயா அவர்கள் பெயரைக் கூறியவுடன். ஏதோ தெரிந்த குடும்பத்துக்குப் பெண் என எண்ணினேன். என் எண்ணம் சரியே. அங்கே ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியையாகப் பணிபுரியும் திருமதி சந்திரா பார்த்தசாரதியின் நெருங்கிய உறவினர். நான் சென்றதும் என்னை அன்புடன் ஏற்று இருக்கை தந்து, தம் பணிவழியே தலை நின்றார். ஒருபுறம் அறையில் 4 உயரத்துக்கு முற்றும் கண்ணாடி புதைத்திருந்தது. இந்த நடன நிகழ்ச்சிக்கு எனவே அமைத்ததோ என ஐயுற்றேன். பள்ளியில் பாலே நடனம் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்கிறார்கள் எனவும் அதற்கெனவே அவ்வாறு அமைக்கப் பெற்றதெனவும்