பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் அதையே நம் நடன வகுப்பு நடத்தக் கொடுத்துள்ளார்கள் எனவும் கூறினர். நம்பள்ளியிலும் அத்தகைய அறை அமைத்து நடனம் கற்றுக் கொடுத்தால் நல்ல்தாயிற்றே என எண்ணி னேன். இரண்டு மணி நேரம் அந்த நிகழ்ச்சிகளைக் கண் டேன். பிற்பகல் மணிக்கு நச்சினர்கினியையிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டேன். நடனத்துக்குரிய பாடல் களின் பொருள்கள் எளிதாகத் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் விளக்கி எழுதிக் கொடுத்தும் சொல்லியும் வைத்தால் பொருளை உணர்ந்து பிள்ளைகள் எளிதில் நடனம் பயில முடியும் என்றேன். எங்கோ, ஏதோ, பணியின் பொருட்டு. பெரிய மருந்தகத்தில் பணிபுரிந்து, தனியாக வாழ்கின்ற இந்த இடத்திலும், நம் நர்ட்டுக் கலையை வேறு எங்கும் காண முடியாத ஆண்டவனையே நடன நாயகனாக - நடராசனாகக் காட்டிப் போற்றும் கலைன்ய ஒம்பி, மற்ற வர்களுக்குக் கற்றுத் தரும் சிறப்பினை எண்ணி அவர்களைப் பாராட்டி அவர்கள் வாழ்வு வளமுற்றுச் சிறக்க' என வாழ்த்தி விடைபெற்றேன், வீட்டில் உணவு கொண்டு ஒய்வு பெற்றேன். திரு. கந்தசாமி அவர்கள் மேலும் பயில்கின்ற ராதலின் (M.B.A.) அதன் வகுப்பு சனிக்கிழமை தோறும் நடைபெறும். காலை 7 மணிக்கு சென்றவர் மாலை 5 மணிக்குத் தான் வீடு திரும்புவாராம். வந்தபின் வெளியே ஒரு அன்பர் வீட்டிற்கு விருந்திற்குச் செல்வோம் என்று கூறிச் சென்றார். வாரத்தின் நாட்களெல்லாம் இயந்திரமாக உழைத்து, ஒய்வுநாளிலேயும் மேலும் மேலும் கற்கும் அவர் ஆர்வம் போற்றுதற்குரியது. வெளியே கதிரவன் நல்ல ஒளி வீசிக் கொண்டிருந்தான். எனவே சற்றே வெளியில் உலாவிவந்தேன். திரு, கந்தசாமி அவர்கள் தம் மகன் சீதரை (பொறியிற்கல்லூரி விடுமுறை). அழைத்துவரச் சென்றனர். மாலை 6.30க்குத் திரும்பும் போது அவர் இருந்தார். அவருடன் கல்லூரி வாழ்வைப் பற்றிப் பேசிக் கொண்டேன். (அவர் சென்னையில் D.A.V ல்