பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளைவ்லேண்டு 11.8.85 267 x பன்னிரண்டு வரை பயின்றவர்) பொறியிற் கல்லூரியின் பல்வேறு பிரிவுகள் பற்றியும் அவர் பயிலும் மின்அணுத் துறை (Electronic) பற்றியும் விளக்கி உரைத்தார். மாலை 7.30க்கு மற்றெரு அன்பர் வீட்டில் குழந்தைகள் தம் பிறந்தநாள் விழாவிற்கு அனைவரும் சென்றபோது நானும் சென்றேன், சூரியன் 8-30 வரை இருப்பதால் பகலாகவே இருந்தது. பல நகர்ப்புறக் குடியிருப்புகளைக் கண்டு கொண்டே நண்பர் வீட்டிற்குச் சென்றேன், எல்லா இடங்களைப் போன்றும் இங்கும் பலப்பல தொழிற்கூடங்கள் பள்ளிகள் பிற வழி நெடுக இருந்தன. சென்ற வீட்டில் வேறுபல அன்பர்களும் இருந்தனர். பிறந்ததாள் விழாவிற்கு உரிய குழந்தைகளைக் காலையில் நடன அரங்கில் கண்டுள் ளேன். அவர்கள் வீட்டில் உள்ள மற்றொரு சிறு குழந்தை யும் என்னைக் கட்டி அணைத்து வரவேற்றது. அவ்வீட் டிற்கு உரிய சிவானந்தம் அவர்களும் வந்திருந்த அவர் நண்பர்கள் சுப்பிரமணியம், பரமசிவம் ஆகியோரும் கோவை யில் மருகர் வேதபுரியிடம் பயின்றவர்கள். நான் இன்னார் என்று சொன்னதும் இரட்டை மகிழ்ச்சி அடைந்தனர். அவர் தம் குழந்தைகள் இரண்டினையும் சென்னையில் 4, 5ம் வகுப்புகளில் படிக்கவிடுவதற்கு அடுத்த மாதம் 15ம் தேதி அங்கே வருவதாக கூறினர். யாழ்ப்பாணத்து அன்பர் ஒருவர் திரு. பாலசுப்பரமணியம் அவர்கள் வந்திருந்தார். இலங்கை யின் இன்றைய கொடுமைகளையும் விடிவு இல்லாத நிலை யினையும் சொல்லி வருந்தினார். மக்கள் - தமிழ் மக்கள் இவ்வளவு கொடுமைக்கு உள்ளாகியும் நாகரிக உலகம் பார்த்துக் கொண்டிருப்பதை நோக்கின் 'கடும்புலி வாழும் காடு நன்றே என்ற சொல் சரியாகவே இருக்கும் என எண்ணினேன். அங்கே வந்திருந்த அன்பர்கள் பலருடன் பேசிக்கொண்டே இருந்தேன். நல்ல உணவு கொண்டேன். பலரும் முன் அறிமுகமில்லாரேனும் நன்கு பழகினர். இந் நாட்டில் அமெரிக்கரும் கூட, தெருவில் சென்றால், அறிந் தவர் போல ஹாய்' என்று கூறி வணக்கம் செலுத்திச்