பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் ஒரு பக்கத்தே ஒரு உயர்ந்த விளையாட்டரங்கம் கண்டேன். 'அதில் சுமார் இரண்டு லட்சம் மக்கள் உட்கார்ந்து பார்க்கக் கூடிய சுற்றிய அடுக்கிருக்கைகளும் மூடிய இருக்கையிடங் களும் உள்ளனவாம், மிக உயர்ந்து காணப்பெற்றது. வாயில் அழகியது. அடிக்கடி கோடைக் காலத்தில் இங்கே பல விளையாட்டுகள் நடைபெறுமாம். சிலவற்றிக்கு செல வெல்லாம் போகப் பத்து இலட்சம் டாலர் நிச்சயமாக மிகுதி யாக வருமாம். எங்கேயும் இந்த விளையாட்டு அரங்கங்கள் வேடிக்கை அரங்கங்களாக நின்று நல்ல வருவாயினைத் தருகின்றனவன்றோ? நம் நாட்டிலும்தான். பின் நகருக்குள் புகுநது பல்கலைக்கழகங்களை அடுத்து இரு பெரு மருந்தகங்களைக் கண்டேன். பல நாடுகளிலிருந் தும் இந் நாட்டில் பல மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணச் கான மக்கள் இங்கே வைத்தியம் செய்து கொள்ள வருகின் றார்களாம். இங்கே பலதுறைகள் சிறந்துள்ளன: மிகக் சிறந்ததாக திறந்த இதயச் சிகிச்சை (Open heart) செய்யப் பெறுகிறதாம். நாம் நாட்டிலிருந்தும் சிலர் இங்கே வந்து அந்தச் சிகிச்சை செய்து கொண்டு திரும்பியுள்ளனராம். ஒரு வாரத்தில் முடிந்து திருபிவிடலாம். இந்த நாட்டிலேயே இது மிகச் சிறந்த ஒன்றாகப் போற்றப் பெறுகின்றதாம். இந்திய நாடு உட்பட பல நாட்டுப் பேரறிஞர்கள் இங்கே பணியாற்று கின்றனர். வெளிநாடுகளிலிருந்து வரும் நோயாளிகளும் அவர் உடன்வருபவரும் தங்குவதற்கெனத் தனித்தனி'அறை கள், தக்க வசதிகளுடன், அமைந்த், பெரிய பல மாடிக் கட்டடமும் ஒன்று உள்ளது. நோய் பெற்றோர் நோய் நீங்கத் தக்க நல்வழிகளில் சிகிச்சை செய்வதோடு, மேலும் அத்துறை பற்றிய ஆராய்ச்சிகளும் நடைபெறுகின்றனவாம். இந்தச் சிற்றுாரின் பரந்த மருந்தகத்தின் எல்லையில் பத்தில் ஒரு பகுதிகூட நம் சென்னை மருந்தகம் இராது. (இதனால் அதை நான் குறை கூறவில்லை: இப்படியெல்லாம் நம் நாடு என்று வளருமோ என்ற ஏக்கத்திலேயே எழுதுகிறேன்). சென்னைக்கு வெளியில் உள்ள எத்தனையோ பரந்த இடங்