பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் என்றும் திரு. கந்தசாமி அவர்கள் கூறியபோது நான் மகிழ்ந்தேன். ஊர் சென்றதும் எங்கள் முதல்வருடன் கலந்து தேவைக்கு முறைப்படி கடிதம் எழுதுகிறேன் என்றேன். அங்குள்ள சில கலை சம்பந்தமான - அறிவியல் சம்பந்தமான பொருட்காட்சிகள் (Museum) பார்க்கத் தக்கன. அவர்கள் ஆராய்ச்சிகளும், கண்டுபிடிப்புகளும் பழைய ஆய்வுப்பொருள்களும் கண்டு, எண்ணி கருத்திருத் திப் போற்றத்தக்கன. அனைத்தையும் கண்டு கொண்டே ஒருமணி அளவில் வீடு திரும்பி உணவு கொண்டோம். நான்கு மணிக்கு விமானத்தில் சிகாகோ புறப்பட வேண்டு மாதலால் அதற்கென ஆவன செய்ய முயன்றேன் சற்றே ஒய்வு பெற்று மாலை நான்கு மணிக்கு விமான நிலையம் புறப்பட்டேன். திருமதி. விஜயா கந்தசாமி அவர் கள் நன்கு உபசரித்து வழி அனுப்பினார்கள். திரு. கந்தசாமி அவர்கள் விமான நிலையம் வந்து நான் விமான நுழை வாயிலில் செல்லும் வரையில் உடன் இருந்து வழிநெடுக எான் பயணம் முழுதும் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியும் உடல் ஒம்பும் முறை பற்றியும் விளக்கிக்கொண்டே வந்தார். நன்றிகூறி அவர்களிடம் விடை பெற்றுப் புறப் பட்டேன். விமானம் சரியாக மாலை 5க்குப் புறப்பட்டது. சரியாக சிகாகோ நேரப்படி (ஒரு மணிநேரம் பிந்திச் செல்லும்) 5-15க்கு சிகாகோ விமானநிலையத்தில் இறங்கி னேன். விமானநுழைவாயிலில், திரு. ஏகாம்பரம் அவர்தம் மருகரும் டாக்டர் மு.வ. அவர்தம் தம்பி மகனுமாகிய திரு. கிருஷ்ணன் அவர்கள் இன்முகத்தோடு வரவேற்றார். காரில் அவருடன் வீடு சென்றதும் திருமதி. விஜயாகிருஷ்ணன் அவர்கள் உபசரித்தனர். உடன் சேலம் பரமத்தி வேலூரிலி ருந்து இங்கே பணியாற்றும் மற்றொரு பொறியாளர் திரு. பழநியப்பர் தம் துணைவியாருடன் இருந்தார். அவர்கள் சேலம் சாரதா கல்லூரியில் பயின்றவர்கள். அனைவரும் அமர்ந்து நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தோம். தமிழ் நாட்டு நிலை, தமிழர் நிலை, அமெரிக்காவில் வாழும் தமிழர்