பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளைவ்லேண்டு-சிகாகோ 12-5-85 275 நிலை அனைத்தும் பேச்சில் வந்தன. மு.வ. அவர்தம் பிள்ளைகளைப் பற்றியும் அவர்தம் துணைவியாரைப் பற்றி யும் நலம் பல திரு. கிருஷ்ணன் கேட்டறிந்தார்கள். என் துணைவியினையும் அவர்தம் தாயார் நன்கு அறிவர் என்றும் எப்படி உள்ளார்களென்றுக் கேட்டார்கள். அவர் 1958 லேயே மறைந்தமை கூறினேன். வள்ளி முதலியோர் நலனும் கேட்டறிந்து, ஒரு வாரம் தங்கிச் செல்லவேண்டுமென்றார். இடையில் கவாய் ஆதினத்திலிருந்து தொலைபேசியில் நான் வரும் நாளைக் கேட்டறிந்தார்கள். உணவுக்குப்பின் திரு. பழநியப்பன் 60 க்ல் தொலைவிலுள்ள தம் இல்லத்துக்கு விடைபெற்றுச் சென்றபின், இரவு 10-30 அளவில் உறங்கச் சென்றேன். .