பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிகாகோ 18.5.85 விடியற்காலை எப்போதும் போல எழுந்து காலைக் கடன்களை முடித்துக்கொண்டு குறிப்பின்ை எழுதி முடித் தேன். காலை 6 மணி அங்கே நம்நாட்டில் மாலை 6 மணி. எனவே இதே வேளையில் நம் பள்ளியில் அருட்டிரு சின்ம யானந்தர் அவர்களின் கீதைப்பொழிவும் மாநாடும் தொடங்கி கியிருக்கும் என எண்ணி என் சிந்தனை பள்ளியினைச் சுற்றியே வட்டமிட்டது. ஒரு மாதத்துக்கு மேலாக - 40 நாள் - ஊர் தொறும் “நாடோடி' எனச் சுற்றி உழன்ற காரணத்தாலோ - அன்றி ஏனோ - என் உடலில் ஓர் அயர்ச்சி காணப்பெற்றது. எனவே நான் இரண்டொரு நாள் எங்கும் வெளியில் போகாது அமைதியாக வீட்டிலேயே இருக்க முடிவு செய் தேன். பல கடிதங்கள் இந்த முகவரிக்கு வந்திருந்தன காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு, எனக்கு வந்த கடிதங்களைக் கண்டு, பதில்கள் அனைவருக்கும் எழுதி முடித்தேன். சோர்வ அதிகமானதால் படுத்து உறங்கி விட்டேன். பிறகு 2 மண அளவில் மெல்ல எழுந்து உணவு கொண்டேன். உணவுக்கு பின் சன்னல் அருகே அமர்ந்தேன்.நிமிடத்துக்கு ஒன்று என்னு மாறு வானத்தில் விமானங்கள் வட்டமிட்டுப் பறந்தன. நான் இருந்த இடம் விமான நிலையத்துக்குப் பக்கத்தில் இருந்: தால், விமானங்கள் புறப்பட்டுச் செல்வதும் வருவதும் நன்( தெரிந்தன. நான் நேற்று இறங்கியபோது அந்தச் சிகாகோ விமான நிலையத்தைச் சுற்றி நோக்கினேன். நிலையம் மிக