பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் நாள் 3-4-85 19 தில் ஏற்றிவிட்ட நிலையினை எண்ணிப் போற்றினேன். அந்த விமானம் பெரியது: பிறநாட்டு அமைப்பில் அமைந் தது. ஏற இறக்க, மின் வழிச் செலவு இருந்தமையின் எளிதாக இருந்தது. இடையிடையே காப்பி, டீ குளிர்பானங் கள் நிலையத்தே வழங்கினர். பலர் பல மது வகைகளைப் பருகினர். விமானம், டோக்கியோவிலிருந்து வந்து, சுவிஸ் நகர், சூரிச் செல்ல வேண்டியது: ஒரு மணி நேரம் கடந்து வந்தது; எனவே விடியல் 2.30க்கே விமானம் புறப் பட்டது. அது நேராகச் சுமார் 5000கல் (8000.கிலோ மீட்டர்). எங்கும் இறங்காது. நேரே செல்லும் தன் பயணத்தைத் தொடங்கியது. . விமானத்தில் பணியாளர் - ஆண், பெண் இருபாலரும் . நன்கு உபசரித்தனர். அந்த வேளையிலும் நல்ல உணவு பரிமாறினர். நான் ஒன்றும் கொள்ளவில்லை. வானவெளி யில் சென்ற அந்த விமானத்தில் அசைவோ, ஒலியோ ஒன்று மில்லை. எனவே.வீட்டில் உறங்குவது போன்று அப்படியே காலை நீட்டிக்கொண்டு உறங்கி விட்டேன். நம் இந்திய விமானத்தில் (Airlines) காலை நீட்டவும் இடமில்லா நிலையினையும் இதில் இருந்த இடவசதியினையும் அப்ப டியே நினைத்துப் பார்த்தேன். i விமானம் ஆடாது அசையாது எத்தனையோ நாடு களைக் கடந்திருக்க வேண்டும். விடியல் ஆறுமணி அளவில் கண் விழித்தேன். காலைக் கடன்களை முடித்துக் கொண்டு நாள்தோறும் முறையாகச் செய்யும் இறைவழி பாட்டினை இருந்த இடத்திலிருந்தே செய்துமுடித்தேன். அதற்குள்.காப்பி, டீ முதலியன தரப்பெற்றன. அந்த நேரத் தில் 6.30 அளவில் (நம் நாட்டில் 10.30 இருக்கலாம்) நல்ல உணவு - சைவ உணவு (பழவகை, பால், ரொட்டி, பழரசம் முதலியன) வழங்கப்பெற்றது. உண்டு முடித்த அளவில் சூரிச் விமான நிலையத்தில் சுமார் 8 மணிக்கு விமான்ம் இறங்கியது. அந்த விமான நிலையம் மிகப் பெரியது. பல பெரிய - சிறிய . பயிற்சியளிக்கும் மிகச் சிறிய . விமானங்கள்