பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37.8 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் வருந்தினேன். இந்த நாட்டில் இரண்டொரு இடங்களில் நடைபெற்ற தொழிலாளர் வேலை நிறுத்தம் பற்றியும் குறித்தனர். பஸ் நிறுத்தம் -பள்ளி கல்லூரி நிறுத்தம் - மூடு தல் போன்ற தேவையற்ற செயல்கள் இல்லையாயினும் சில சமயங்களில் இத்தகைய வேலை நிறுத்தங்கள் - முதலாளி தொழிலாளிதம் போராட்டம் நடைபெறுவது உண்டாம் இந்த நாட்டிலும் ஏழைகள் நூற்றுக்கு இருபது பேராவது இருக்கிறார்கள். எல்லோரும் இங்கே குபேரர்கள் என்று யாரும் முடிவு கட்டக் கூடாது. நாடு செல்வ நாடாயிருந் தாலும், வறுமையில் வாழும் மக்களும் இங்கே உள்ளனர். ஆயினும் நம் நாட்டைப் போன்று குடிசைகளோ - மாற்று வாரியமோ . மாற்ற மாற்றத் தோன்றும் திடீர் நகர்க் குடிசைகளோ-கிடையா. அவர்களுக்கெனப் பல அடுக்குகள் கொண்ட குடியிருப்புகளை அரசாங்கமே கட்டித் தந்துள்ளது. அப்படியே வயதானவர்களுக்கும் தனிக்குடி யிருப்புகள் உள்ளன. எனவே வறுமையிலும் வயதானகாலத் திலும் ஆதரவற்ற நிலையில் அரசாங்கம் ஒரளவு உதவி புரிந்து வருகிறது. சென்ற நூற்றாண்டில் (19) இந்நாட்டில் உண்டான பல புரட்சிகரமான மாறுதல்கள் நாட்டின் இன்றைய நிலைக்குக் காரணம் எனலாம். அமெரிக்க உரிமை போருக் குப்பின், உள்நாட்டு போர் (Civil War) நடைபெற்று வரலாற்றினைப் பயில்கின்றோம். கறுப்பர் வெள்ளையரோடு எல்லா உரிமைகளையும் பெற்றுச் சரிநிகர் சமானமாக வாழும் நிலை உண்டான காலத்தையும் அதைச் செயலாக்கிய ஆபிரகாம் லிங்கனைப் பற்றியும் நினைத்தேன். அவர் பிறந்த வாழ்ந்த - சீர்திருத்தம் செய்த ஊர் இந்த ஊரே என்றனர். பெரும்பாலும் விவசாய நாடாக இருந்த இதனைத் தொழில்வள நாடாக்கிய காலத்தில் அந்த மாற்றம் நடை பெற்றது. பல்வேறு இயந்திரங்களைப் படைத்து, அவற்றை பெரும் உழவர்களுக்கு உதவி, அங்கே பணியாற்றிய பல இலட்சம் மக்களைத் தொழில் துறைக்குக் கொண்டு வந்த