பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிகாகோ 14.5.85 283 எழுப்பியுள்ளார். கி. பி. 1300 ல் அவர்கள் பெரும்பாலும் அந்த இடத்தில் வாழவில்லை எனவும் முடிவு கட்டியுள்ள னர். ஆயினும் மூன்று நூற்றாண்டுகளுக்கு மேல் பொன்னக ரங்களில் வாழ்ந்த அந்த மக்களின் வாழ்வு சிறந்த ஒன்று என்றும் இன்றும் மாலைக் கதிரவன் வாயிலில் அத் தொன்மையான நிலையங்கள் பொன்னென மிளிர்கின்றன வென்றும் காட்டி, அதுபற்றி மேலும் ஆராய வேண்டிய இன்றியமையா நிலையினையும் ஆசிரியர் வற்புறுத்தியுள் ளார். நம் நாட்டில் இத்தகைய அகழாய்வுகள் மேற் கொள்ளப்பெறின் எவ்வளவோ உண்மைகள் புலப்படும் என்று நம் நாட்டு ஆய்வாளர்கள் கூறுகின்றார்களேயன்றி, அவற்றைப் போற்றிப் பாதுகாக்கும் நிலை நாட்டில் இல்லையே. இங்கே குறிக்கப்பெற்ற காலம் நம் நாட்டில், தஞ்சையில் இராசராசன் பரம்பரையினர் ஆண்ட் பிற்காலச் சோழர் காலமல்லவா! அக் காலத்தில் கட்டப்பெற்ற எத்தனைக் கோயில்கள் கேட்பாரற்றுக் கிடக்கின்றன; சில உருத்தெரியாமற் போய்விட்டனவே. அதற்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்ப்ட்ட இலக்கியங்களைப் பெற்ற பெரு நகரங்களைக் கண்ட நாம் இத் துறையில் எவ்வளவு தூரம் கருத்திருத்தி ஆய்வு செய்கிறோம் என்பதை எண்ணி என் நெஞ்சம் புண்ணாகியது. பல கோடி, பல வகைகளில் செலவிடும் தமிழக அரசு, இத் துறையினை விரிவுப்படுத்தி, வேண்டிய உதவிகளைச் செய்து, ஆழ்பொருள் நிலை உணர்ந்து உலகுக்கு உணர்த்தின் நம் பழம் பெருமையை உலகமே கண்டு போற்றுமல்லவா! இன்று இதுவரையில் நான் சுற்றிய நாடுகளில் தமிழகம் பற்றியும் அதன் தொன்மையைப் பற்றியும் அறிந்தவர் மிகமிகச்சிலரேயாவர். வடநாட்டு நகரங்கள், நாகரிகம், மொழி, மக்கள், வாழ்வு நெறி இவை பற்றி அறியும் அளவில் ஒரு சிறு கூறாயினும் தமிழகத் தொன்மை பற்றி அறியப்பெறின் உலகம் நம்மைப் போற்றும் என்பது உறுதி. தமிழக அரசு இத் துறையில் ஆழ்ந்து கருத்திருத்த வேண்டும்.