பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிகாகோ 14-5-85 285 எனப்பலப்பல வகைத் துறைகளில் நூல்கள், படங்கள், விளக்கங்கள் இருந்தன. ஐந்து கணிப்பொறிகள் வருபவர் உபயோகிக்கும் வகையில் இருந்தன. (குழந்தைகள் பகுதி யிலும் 7, 8 வயதுக் குழந்தைகள் கற்கும் வகையில் கணிப் பொறி வைக்கப் பெற்றிருந்தது) அப்படியே தட்டெழுத்து செய்து கொள்ளவும், படி எடுத்துக் கொள்ளவும் வேண்டிய சாதனங்கள் பொருத்தப் பெற்றிருந்தன. அங்கங்கே தாள்களும் எழுது கோல்களும் வைக்கப் பெற்றிருந்தன. பெரும் பெரும் வண்ணப் படங்கள் பலகையிடப்பெற்று வைக்கப் பெற்றிருந்தன. (அவற்றை விரும்புவோர். எடுத்து சென்று மூன்று மாதங்கள் வரை வைத்திருக்கலாமாம்) அங்கே தனித்தனியாக உட்கார்ந்து ஆய்வு செய்யவும் அறைகள் ஒதுக்கப் பெற்றிருந்தன. ஆகவே இந்த நூல் நிலையம் பயில வருவாருக்கு உண்மையில் பயன் படக்கூடிய வகையில் அமைந்த ஒன்றாக விளங்கிற்று. வெறும் காட்சிப் பொருளாக அன்றி நூல் வழங்கும் நிலையமாக அல்லாமல், அங்க்ே அமர்ந்து ஆய்வு செய்து, அறுதி கண்டு, தொகுத்து தட்டெழுத்திட்டு, படி எடுத்து முடிக்கும் வகையில் வழி செய்திருந்த நிலை கண்டு.மகிழ்ந்தேன். நம் பள்ளியிலும் குழந்தைகளுக்கு (புள்ளியுள்ள கரிய பலகைகளில் எழுத்து களைப் பொருத்தல் முதலாய பலவற்றை) ஏன் புகுத்தக் கூடாது என்ற எண்ணம் தோன்றிற்று. இளங் குழந்தைகள் படிக்கத்தக்க சிறுநூல்களையும்.வாங்க வேண்டும் எனமுடிவு செய்தேன். இத்தகைய எண்ணங்களோடு, கிருஷ்ணன் தம்பதியரோடு இரவு 9.30க்கு வீடு வந்து சேர்ந்தேன். பின் திரு. இராமநுஜம் அவர்களுடன் பல்கலைக் கழக.நிகழ்ச்சி பற்றித் தொலைபேசி வழியே பேசினோம். பின் வேறு பல பேசியிருந்து 10.30க்கு உறங்கச் சென்றேன்.