பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிகாகோ 15-5.85 287 களும் சில சிறு கப்பல்களும் வழிகளில் நிறுத்தப் பெற்றி ருந்தன. இரு பெருங் கப்பல்கள் நேற்றுவரை நிறுத்தம் பெற்றிருந்து, எத்தியோப்பியாவில் உணவின்றித் தவிக்கும் மக்களுக்கு உணவு ஏற்றிக்கொண்டு, நேற்றே புறப்பட்ட தாகக் கூறினர். இத் துறைமுகத்தில் நம் தாயகத்திலிருந் தும் சரக்கு ஏற்றிக் கொண்டு வரும் கப்பல்கள் வந்து தங்கி இறங்குவன இறக்கி ஏற்றுவன ஏற்றிச் செல்லுமாம். சென்னையைப் போன்று பெரிய சுங்கச் சாவடியும் சிறு கலங்கரை விளக்கமும் பிற துறைமுகத்தின் அங்கங்களும் பெற்று அது விளங்கிற்று. இத்தகைய இயற்கைத் துறை முகங்கள் பல இந்நாட்டில் உள்ளன; இயற்கை அன்னை வாரி வழங்கிய செல்வங்கள் இவை. கடலுக்கு அருகில் இன்றேனும் இப்பேரேரிகளின் இணைப்பால் உள்நாட்டில் ஐநூறு கல் வரையில் பெருங் கப்பல்கள் போக்குவரத்து நடை பெறுவது இந்நாட்டின் வாணிப வளத்துக்கும் செல்வ செழிப்புக்கும் ஒரு காரணமாக அமைகின்றது. துறை முகத்தை அடுத்து அந்த ஏரிக்கரையினை ஒட்டியே காரில் சிறிது தூரம் சென்றோம். நல்ல புல்தரை - சாலைக்கும் நீருக்கும் இடையில்; உயர்ந்த பசும் மரங்கள்: நல்ல நீர் ஏரி, இயற்கை தன் அழகினை அள்ளித் தெளித்த அந்த காட்சி யினை மறக்க முடியாது. இவற்றைக் கண்டு கொண்டு (Greater America) பெரும் அமெரிக்கா, என்ற சுமார் 15 அல்லது 20 கல் தொலைவிலுள்ள இடத்திற்குச் செல்லலாமா என்றனர். அது நாங்கள் காலையில் வந்த வழியில் இருந்தது. வழியில் பல்வேறு வகைப்பட்ட வெவ்வேறு வெருவத்தக்க விளை யாடல்கள் நிகழும் ஒரு பரந்த நிலப்பரப்பைக் காட்டினார் கள். வானோங்கிய சுழற் சக்கரங்களும் மின்விசை கூடிய சறுக்கு மரங்கள் - அசையும் பாலங்கள் - படிகள் - துறைகள் இன்னும் எத்தனையோ புறத்தில் காணப் பெற்றன. உள்ளே பலவகை விளையாட்டுகளும் சூதாடுமிடங்களும் (Gambling) உள்ளனவாம். அங்கே போக வேண்டாம் என்ற