பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 ஏழு நாடுகளில் எழுபது an 4 هك இருந்தன. எங்கும் நம் சென்னையில் உள்ளமைபோன்று படிவைத்து ஏறவேண்டிய நிலையில்லை. நேராக நடந்து விமானத்துள் செல்லும் வகையில் அமைப்பு இருந்தது. பம்பாயிலும் அப் படி யே. இங்கே ஸ்விட்ஸர்லாந்து நகராகிய சூரிச்சில் இறங்கி அதே நாட்டின் மற்றொரு நகரான ஜினிவா செல்ல வேண்டும். அந்த நெறியினையும் அலுவலர் நன்கு ஆற்றுப்படுத்தினர். எனவே அங்கிருந்த தனி விமானத்தில் அமர்ந்ததும் மறுபடியும் சிற்றுணவு வழங்கப் பெற்றது. மது அருந்தினோர் பலர். சரியாக 9 மணியளவில் (சுமார் 20 நிமிடப் பயணம்) விமானம் ஜினிவா நகரில் இறங்கியது. விமான நிலையம் மிகப் பெரிய தாக இல்லை; விமானத்தில் இறங்கி நெடுந்துரம் நடந்தே நிலைய எல்லையை அடையவேண்டும். எப்படியோ வந்து உரிய சாமான்களை எடுத்துக்கொண்டு வாடகை மோட்டார் வழியே (செக் பணம் நிலையத்தே மாற்றிக் கொண்டு) எனக்கென ஒதுக்கியுள்ள ஒட்டலுக்கு வந்து சேர்ந்தேன்.