பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிகாகோ 15.5.85 289 உரிய பாடங்களைப் பயிலலாம். நேரமும் ஆசிரியர்களும் கிடைக்கப் பெறின் முழுநேரமும் இருந்து பயிலலாம். அவ்வப் பாடங்களுக்கு உரிய ஆசிரியர்களிடம் கற்பன கற்று, உரிய தே ர் வு க ளி ல் வெற்றி பெற்றால் அந்தப் புள்ளிகள் கணக்கிடப் பெறும். தேவையான புள்ளி களில் இரண்டாண்டுகளில் வெற்றி பெற்றாலும் அந்தப் பட்டப் படிப்பினை அவர் முடித்ததாகக் கருதிப் பட்டம் வழங்குவர். அத்தகைய பயிலும் மாணவர், கல்லூரி திறந்திருக்கும் நாட்களில் மட்டுமன்றி, இந்த விடுமுறை நாட்களிலும் தனியாகப் பயின்று அந்தப் புள்ளிகளைப் பெற்றாலும் அவற்றையும் கணக்கிடுவர். அன்றி வேறு துறைகளில் ஒய்வு இன்றிப் பணியாற்றுகின்றவர்களும் இக் கோடை வகுப்புகளில் சேர்ந்து ஒவ்வொரு பகுதியாகப் பயின்று வெற்றி பெற்று, 5 (அ) 6 ஆண்டுகளிலும் பட்டங் களைப் பெறுவர். வெளி நாட்டிலுள்ள ஆசிரியரும் மாணவரும் பிறரும் தம் விடுமுறைக் காலங்களில் இந்த வகுப்பு களில் சேர்வர். எனவே இந்த விடுமுறை வகுப்புகள் அனைவருக்கும் பயன்படுவகையில் அமைகின்றது. பெருந் தொகை கட்டிப் பயிலுவதால் யாரும் இங்கே பட்டப் ப்டிப்பினை வீண் பொழுது எனக் கருதுவதில்லை. அதிலும் சிறப்பாக இந்த விடுமுறை வகுப்புகளில் வெளியிலிருந்தும் சிறந்த வல்லுநர்களும் வந்து பயிற்றுவிக்கின்ற காரணத்தால், இவ்வகுப்புகள் பெரிதும் வரவேற்கப் பெறுகின்றன. வெறும் வாணிப நிலையிலோ, ஏதோ பொழுது போக்கு என்றோ (நம் நாட்டில் பலர் நினைப்பது போன்று) இங்கே இவற்றை நினைப்பதில்லை. உண்மையிலே பலர் இவற்றால் பயன் பெறுகின்றனர். பல்கலைக்கழக நூல் நிலையம் பலவகைப் பிரிவுகளைக் கொண்டதாக அமைந்தது. ஓரிரு பகுதிகளைக் கண்டோம். விடுமுறையாயினும் பல ஆசிரியர்களும் மாணவர்களும் அங்காங்கே அமர்ந்து பல நூல்களைப் பயின்று கொண்டும் குறிப்பெடுத்துக் கொண்டும் இருந்தனர். கழக எல்லைக் @7・一I9