பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் குள்ளே அறைகளுள் - விளையாட்டு அரங்கில் - பலவகை விளையாடல்களுக்கு வாய்ப்பு இருந்ததோடு, வெளியில் பரந்த அகன்ற புல்வெளி பெரு விளையாட்டு அரங்கமாக விளங்கிற்று. இவ்வாறு அப் பல்கலைக்கழகத்தின் பல இடங்களைக் கண்டு கொண்டே மாலை 6 மணி அளவில் வீடு திரும்பினோம். அதற்குள் திரு. கிருஷ்ணன் அவர்களும் பழநியப்பன் அவர்களும் தத்தம் பணிகளிலிருந்து திரும்பி வந்தனர். - நாங்கள் தங்கிய இல்லத்தின் பக்கத்தில் வாழ்ந்த யாழ்ப்பாண அன்பர் ஒருவர் தம் குடும்பத்துடன் அங்கே வந்தார். அவர் தற்போதைய இலங்கையின் அவலம் பற்றியும் பிற பொருள்கள் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார். அவர் தம் மகன் (3 வயது) நான் எங்கும் காண்பது போன்று ஆங்கிலத்தில் வெகுவேகமாகப் பேசினான். தமிழ் வாயில் நுழையவேயில்லை. இவர்கள் தலை முறையில் தாம் தமிழர் என்கிற உணர்வே இல்லையாகும் என்பது உறுதி. தமிழகத்தி லிருந்தும் இலங்கை முதலிய இடங்களிலிருந்தும் வரும் தமிழர்கள் இவ்வாறு இங்கே மட்டுமன்றி, செல்லுமிடமெல் லாம் - வட இந்தியா உட்பட அவரவர் மொழி கற்று வ்ாழ்வதால், தமிழன்னை சங்றே விலகி விடை பெற வேண்டிய நிலையில் உள்ளாள். சிலர் அவளை விடாது பின்பற்ற நினைத்தும் வாய்ப்பும் வழியும் இல்லாமல் சூழலுக்கு உட்பட்டு விலகிச் செல்கின்றனர். இந்த அவல நிலையைப் போக்கத்தக்க வழிகளைத் தமிழக அரசாங்கம் தான் செய்யவேண்டும். தமிழக அரசு ஒன்றும் செய்யாது இருக்குமானால் தமிழர்பற்றி வருங்காலத்தில் வரலாற்றுப் பாடம் இருக்குமே ஒழிய வாழ்வு இருக்காது. இவற்றை யெல்லாம் எண்ணிக்கொண்டே திரும்பி வந்து இரவு 10 மணிக்கு உறங்கச் சென்றேன். .