பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிகாகோ 16-5-85 இன்று காலை முறைப்படி துயில் எழுந்து கடன்களை முடித்துக் கொண்டேன். இயற்கை அன்னையின் சூழல் என்னை ஆட்கொண்டது. நான் சென்னையினை விட்டுப் பம்பாய் கடற்கரையைத் தாண்டி, ஜினிவாவில் கால்வைத்த நாள் முதல், இங்கே வரும் வரையில் - கிளைவ்லேண்டு எல்லை வரையில் என்னை இறையருள் போன்று பின்பற்றி வந்த மழையும் மப்பும், இங்கே வந்த மூன்று நாட்கள் (12 முதல் 14 வரை) ஏனோ தொடரவில்லை. வெப்பம் அதிகமாக இருந்தது. வெப்பநிலை 84 அளவினைக் கடவா திருந்தும் கடந்த ஒரு மாதமாகக் குளிர்ந்த குழலில் இருந்த காரணத்தால், இது அதிகமாயிற்று போலும். சென்னையில் 100 வரையிலும்கூட ஏற்றுச் சாதாரணமாகப் பணியாற்றும் எனக்கு, இரண்டு நாட்களிலும் ஒரு வேலையும் gما هي வில்ல்ை:"ஒரே மயக்க நிலை. நேற்று இரவு அந்த வெப்ப நிலையாலோ ஏனோ உறக்கமும் இல்லை: இங்கே பெரும் பாலான வீடுகளில் மின் விசிறி இல்லை. மாறாகக் குளிர் சாதனப்பெட்டி இருக்கின்றது. நான் தங்கிய அறையிலும் அது இருந்தது. தேவையாயின் பயன்படுத்துவர் போலும். நேற்றுக் காலை திரு. கிருஷ்ணன் எழுந்து வந்ததும் என்னை நோக்கி நன்கு உறங்கினிர்களா? எனக் கேட்டார். நான் உறங்காதது இவருக்கு எப்படித் தெரியும் என எண்ணினேன். உள்ள நிலையும் வெப்பமும்தான் அதற்குக் காரணம் என அவர் கூறி, தேவையானால் இரவுக்குக் குளிர் சாதனப் பெட்டியினைப் பயன்படுத்தலாம் என்றார். ஆனால்