பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் (இருண்ட கால) இலக்கியங்கள் அமைந்த நிலைபற்றியும் களப்பிரர் போன்றார் புகுந்த நிலைபற்றியும் பின் காஞ்சிப் பல்லவர் காலத்தில் எழுந்த தேவாரம் பிரபந்தர்கள் அமைப் பினைப் பற்றியும், அவை சங்க இலக்கியங்களோடு இலக்கிய மரபில் மாறுபட்டு நின்ற நிலைபற்றியும், சங்க காலத்திலேயே எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, காப்பியம் இவற்றின் இடையில் உண்டான வேறுபாடுகள் பற்றியும் விளக்கி உரைத்தேன். சங்க காலத்தில் ஏற்றம் பெற்றிருந்த பாணர் போன்ற சிறந்த கலைஞர்கள் பிற்காலத்தில் இழிகுலத்தாராக மதிக்கப்பட்ட நிலைபற்றியும் கேட்டனர். இடைக்காலத்திலும் பிற்காலச் சோழர் காலத்திலும் 15, 16, 17 நூற்றாண்டுகளில் வேற்று மக்கள் ஆண்ட காலத் திலும் தமிழகத்தில் உண்டான பல்வேறு சாதிப் பிரிவுகளை யும் அவை வளர்ந்த வகைகளையும் அவற்றால் இக் கலைஞர் கீழே தள்ளப்பட்ட நிலையினையும் சுட்டி, தற்காலத்தில் அந் நிலை மாறிவரும் தன்மையினையும் விளக்கினேன். தற்காலத் தமிழக அரசாங்கம் தமிழ் எழுத்துக்களை மாற்றிய தன்மையினையும் காரணங்களை யும் அறிய விரும்பினர். நானும் முன் ஒரு காலத்தில் - 1950-ல் ஏற்பட இருந்த முழுமாற்றத்தினையும் அதை இராஜிவந்தபோது நிறுத்திவைத்த தன்மையினையும் சுட்டி தற்போதுள்ள அளவான மாற்றம் தட்டெழுத்துக்கு எளிதாகுமாறு செய்யப்பெற்றதையும் விளக்கினேன். மேலும் ஐ, ஒள இரு எழுத்துக்களின் தனித்தன்மையினை விளக்கி, அவற்றின் மாற்றத்தை அரசாங்கம் திரும்பப் பெற்று, தனி எழுத்தினும் பொருள்தரும் தன்மையினை உணர்ந்து ஆணை பிறப்பித்த நிலையினையும் சுட்டினேன். மேலும் இம் மாற்றங்களை முன்னர் ஒலையில் எழுதுவதற்கு ஏற்றதாக அமைய, இன்று தட்டெழுத்துக்கு ஏற்றபடி பழைய வடிவங் களைப் பெற்ற நிலையினையும் சுட்டிக் காட்டினேன், தமிழ் இலக்கிய மரபு பற்றியும் இன்றைய தமிழ்நாட்டுப் பல்கலைக் கழக ஆராய்ச்சிகள் பற்றியும் கேட்டனர். மேலை நாடுகளில் தமிழர்தம் பழம்பெருங் கலைகளையும் இலக்கி