பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிகாகோ 17.5.85 299 யங்களையும் பண்பாட்டினையும் விளக்கும் ஆராய்ச்சி களைச் செய்து, ஆங்கிலத்தில் சிறந்த நூல்களைக் கொணரும் பல்கலைக் கழகங்களையும், அவற்றைவிட்டு எங்கோ செல்லும் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சி நிலைகளையும் எண்ணி ஒரளவு விளக்கிக் கூறினேன். அனைவரும் நன்கு கலந்து பல பொருள்கள் பற்றி உரையாடினர். சங்க இலக்கியங்களையும் பிற்காலச் சமய இலக்கியங்கள் போன்றவற்றையும் இங்குள்ளவர் ஆராய்கின்றனர் என அறிந்தேன். திரு. இராமாநுஜம் அவர்கள் பல சங்க இலக்கியப் பாடல்களை நன்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். முடிந்து இன்னும் சில நாளில் வெளிவர இருக்கின்ற (Poetry on War 8 Love) தமிழகக் காதல், போர் பற்றிய பாடங்களின் ஆங்கில மொழிபெயர்ப்பின் அச்சிட்ட படியினைக் காட் டினர். முன்னரே அவரால் இதுபோன்ற மொழிபெயர்ப்பு நூல்களும் வந்துள்ளன. நம்மாழ்வார் பற்றியும் அவர் பாடல்களையும் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். The interior landscape என்று குறுந்தொகைப் பாடல்கள் சிலவற்றில் அமைந்த (ஏறக்குறைய 80 பாடல்கள்) இயற்கை நலத்தை எல்லாம் மொழிபெயர்த்து வெளியிட்ட ஆங்கில நூலினையும் எனக்கு அளித்தார். மற்றொரு பேராசிரியர் தேவாரம் பற்றிய ஆராய்ச்சி நூல் ஒன்றை எழுதியிருப்பதாகவும் மற்றொருவர் சிலப்பதிகாரத்தை மொழி பெயர்த்திருப்பதா கவும் கூறினர். தலபுராணங்களைப் பற்றிய ஆய்வு நூல் ஒன்றும் அண்மையில் வெளியிட்டுள்ளனர். தமிழ் நூல் நிலையத்தில் எண்ணற்ற பழங்கால இலக்கிய நூல்களையும் இக்காலத்திய புதினங்களையும் வாங்கிவைத்துள்ளமையை யும் அவற்றைத் தமிழ் மாணவர் மட்டுமன்றிப் பிற துறை யினரும் எடுத்துப் பயன்படுத்துகின்றனர் என்றும் கூறினர். பின் பிற்பகல் 1 மணி அளவில் கூட்டம் முடிந்து உணவுச் சாலைக்குச் சென்றோம். . அச் சாலை, பேராசியர்கள் கூடி அமைதத கூட்டுறவு முறையில் நடைபெறும் ஒன்றாகும். மாணவர்களுக்கென