பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் நாடுகளில் இருவல்லரசுகள் இவற்றால் அழிவுப்பொருள்கள் ஆகும் தன்மையினையும் அதனால் என்று என்ன விளை யுமோ என்று உலக மக்கள் அஞ்சி அஞ்சி வாழும் தன்மை யினையும் எண்ணினேன். பிறகு அடுத்திருந்த அந்த அணு ஆய்வுக் களத்திற்கு அழைத்துச் செல்லப் பெற்றேன். அதுபற்றி எனக்கு ஒன்றும் விளங்காவிடினும், அதனையெல்லாம் கண்டு மலைத்து நின்றேன். அங்கே ஓரிடத்தில் நிலம், நீர், காற்றுதி இவற்றின் ஒன்றிய நிலையினையும் அவை பிரியும் நிலையினையும் . ஒவியமாக கலைதோய்ந்த சித்திரமாக - அறைமுழுதும் பரவிய நிலையில் அமைத்து ஒன்றை ஒன்று பற்றிப் படரும் தன்மைகளை விளக்கியிருந்தனர். மணிவாசகர்தம் பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி வளியிடை இரண்டாய் விரிந்தாய் போற்றி வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி" என்ற பஞ்சபூத அமைப்பின் தத்துவம் இங்கே நன்கு விளக்கப்பெற்றுள்ளது. பண்டாரப் பாட்டு என்று அதைப் பரிகசிக்கும் 'நல்லவர் இங்குவந்து காணின் இதன் உண்மை யினை உணர்வர். நான் இந்த அடிகளைச் சொல்லி அக் காலத்தையும் விளக்கியபோது, உடன்வந்த அமெரிக்க மாணவர் இருவரும் வியந்து போற்றினர். இதுபோன்ற, ஆய்வுக் கூடங்கள் இன்னும் பல இப் பல்கலைக்கழத்தே உள்ளதெனக் கூறினர். எனக்கு இவற்றை அறிந்துணரும் ஆற்றல் இன்மையாலும் 3.30க்குள் நூல் நிலையத்தையும் பிறவற்றையும் கண்டு முடிக்க வேண்டியிருந்தமையாலும் அங்கிருந்து புறப்பட்டோம். . ." நூல் நிலையத்துள் புகுந்தோம்; மிகப் பெரியது. உள் மாணவர் மட்டும்தான் புகலாம். எனவே எனக்குத் தனியாக நுழைவுச் சீட்டு வாங்க வேண்டியிருந்தது. பலதுறை